உங்களில் பலர் திடீர் மார்பு வலி மற்றும் நெஞ்செரிச்சல் பாதிப்பை சந்தித்து வருவீர்கள்.இந்த பாதிப்புகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பது நல்லது.
1)கற்றாழை மடல்
2)தேன்
மார்பு பகுதியில் வீக்கம் ஏற்பட்டால் கற்றாழை சாறு அருந்தலாம்.இந்த கற்றாழை சாறை வீட்டில் செய்ய இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்.
முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் சீவிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.இந்த ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு கிண்ணத்தில் தேன் சேர்த்து அரைத்த கற்றாழை சாறு ஊற்றி அருந்தினால் மார்பு வீக்கம் குறையும்.கற்றாழையில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மார்பு வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)தண்ணீர்
ஒரு கிண்ணத்தில் ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து பருகினால் நெஞ்செரிச்சல்,மார்பு வலி,மார்பு வீக்கம் குணமாகும்.
1)பெருஞ்சீரகம்
2)தண்ணீர்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் நெஞ்சு வலி,நெஞ்செரிச்சல் குணமாகும்.
1)இஞ்சி
2)தேன்
ஒரு கப் தண்ணீரில் ஒரு துண்டு இடித்த இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் மார்பு வீக்கம் குணமாகும்.
1)பேக்கிங் சோடா
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல்,மார்பு வலி குணமாகும்.