Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடிக்கடி பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி! இதை குணமாக்க இந்த விதைகளை பயன்படுத்துங்க! 

Frequent migraine headaches! Use these seeds to cure it!

Frequent migraine headaches! Use these seeds to cure it!

அடிக்கடி பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி! இதை குணமாக்க இந்த விதைகளை பயன்படுத்துங்க!
நம்மில் ஒரு சிலருக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஏற்படும். இந்த ஒற்றை தலைவலியை குணமாக்கும் சூப்பரான ஒரு வைத்திய முறையை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கு இன்னும் சரியான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மூளையில் ஏற்படும் செரோடோனின் மாற்றம் தான். இந்த ஒற்றைத் தலைவலி என்பது தலையின் வலது புறம் அல்லது இடது புறம் எதாவது ஒரு பக்கத்தில் ஏற்படும்.
இந்த ஒற்றைத் தலைவலி நமக்கு கடுமையான வலியை கொடுக்கக் கூடியது. இதற்கு நிரந்தர தீர்வு என்பது இல்லை என்றாலும் வலிக்கும் பொழுது மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மாத்திரைகளையே தொடர்ந்து ஒற்றைத் தலைவலிக்கு எடுத்துக் கொண்டால் அது வயிற்றினுள் ஒரு புதிய பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே இந்த பதிவில் ஒற்றைத் தலைவலியை சரி செய்ய அருமையான மருத்துவ வழிமுறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒற்றைத் தலைவலியை சரி செய்ய ஜாதிக்காயின் விதைகள் நமக்கு பயன்படும். இந்த ஜாதிக்காய் விதைகள் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துவது மட்டுமில்லாமல் மூளையில் இரத்த ஓட்டத்தை சீராக  வைத்துக் கொள்ள உதவுகின்றது. மன அழுத்தத்தை குறைக்கவும் ஜாதிக்காய். விதைகள் பயன்படுகின்றது. மேலும் மூளைக்கு தூண்டுதலாகவும் ஜாதிக்காய் பயன்படுகிறது.
என்னதான் ஜாதிக்காய் விதைகளில் நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளது. ஜாதிக்காய் விதைகளை அளவுக்கு அதிகமாக நாம் சாப்பிட்டால் நமக்கு மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்பொழுது ஜாதிக்காய் விதைகளை ஒற்றைத் தலைவலி குணமாக எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
ஒற்றைத் தலைவலிக்கு ஜாதிக்காய் விதைகளை பயன்படுத்தும் முறை!
ஒரு மிக்சி ஜார் எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் ஜாதிக்காய் விதைகளை போட்டுக் கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதை அரைத்துக் கொள்ளவும். இதோ ஒற்றை தலைவலியை குணமாக்கும் மருந்து தயார்.
பயன்படுத்தும் முறை:
இந்த ஜாதிக்காய் விதைகள் விழுதை நம்முடைய தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பற்று போட்டாலும் சரி. அல்லது எண்ணெய் போல தலையில் தேய்த்துக் கொண்டாடும் சரி. பின்னர் சிறிது நேரம் கழிந்து இதை கழுவி விடலாம். இதைப் போல தொடர்ந்து அடிக்கடி செய்து வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
Exit mobile version