Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரண்ட்ஷிப் தின ஸ்பெஷலாக அனிருத் பாடிய நட்பு பாடல்!! இணையதளத்தில் வைரல்!!

Friendship song sung by Anirudh as a Friendship Day special !! Viral on the website !!

Friendship song sung by Anirudh as a Friendship Day special !! Viral on the website !!

பிரண்ட்ஷிப் தின ஸ்பெஷலாக அனிருத் பாடிய நட்பு பாடல்!! இணையதளத்தில் வைரல்!!

தமிழில் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் அனிருத் ரவிச்சந்திரன். இவர் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும் இந்த 3 திரைப்படத்தில் ஒய் திஸ் கொலைவெறி டி என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இவரது இசைப் பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்தார். தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

மேலும் இவர் 2016 ஆம் ஆண்டில் சோனி மியூசிக் உடன் ஒரு பதிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது 50வது சுயாதீன ஆல்பங்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளை வெளியிடுகின்றது. மேலும் 2017 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா அவரை சென்னையில் மிகவும் விரும்பத்தக்க மனிதர்கள் என்று விவரித்தது. 2018 ஆம் ஆண்டு அவர் மீண்டும் அப்பட்டத்தை வென்றார். தொடர்ச்சியாக இரண்டு முறை இந்த பட்டத்தை அடைந்த முதல் இசை கலைஞர் ஆவார்.

 

Natpu Music Video (Tamil) - RRR - Anirudh, Maragathamani | NTR, Ram Charan | SS Rajamouli

இவர் தற்பொழுது தமிழில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் அந்த வகையில் ராஜமவுலி இயக்கி வரும் RRR திரைப்படம் தற்பொழுது வெளியாக உள்ளது. இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் ஆலியா பட் அஜய் தேவ்கன் ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இப்படத்தை பிவிபி நிறுவனம் தயாரித்து வருகிறது. இடத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அந்தப்படத்தில் தற்பொழுது அனிருத் பாடிய பாடல் ஒன்றை நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. அந்த பாடல் நண்பர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பாடலாகும். தற்போது அந்த பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version