Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முக கருமை முதல் முடி உதிர்வு வரை.. வைட்டமின் ஈ மாத்திரையை இப்படி பயன்படுத்தி தீர்வு காணுங்கள்!!

From dark face to hair loss.. use Vitamin E tablets to get rid of it!!

From dark face to hair loss.. use Vitamin E tablets to get rid of it!!

உங்களில் பலர் முக கருமை,உதடு கருமை,கருவளையம்,முடி உதிர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவீர்கள்.அழகு சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை பின்பற்றுங்கள்.

கை,கால் கருப்பு நீங்க:

1)வெந்நீர்
2)எலுமிச்சை சாறு
3)வைட்டமின் ஈ மாத்திரை

ஒரு பாத்திரத்தில் 250 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

இதை கை மற்றும் கால்களுக்கு அப்ளை செய்து மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் உள்ள டெட் செல்கள் நீங்கி புது பொலிவு கிடைக்கும்.

முக கருமை நீங்க:

1)கற்றாழை ஜெல்
2)வைட்டமின் ஈ மாத்திரை

ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை கலந்து முகத்திற்கு அப்ளை பண்ணி சுத்தம் செய்து வந்தால் முகக் கருமை நீங்கி பளிச்சிடும்.

கழுத்து கருமை நீங்க:

1)காபி தூள்
2)வைட்டமின் ஈ மாத்திரை

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி காபி தூள் மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து பேஸ்ட்டாகவும்.பிறகு இதை கழுத்து பகுதியில் அப்ளை செய்து க்ளீன் செய்தால் கருமை நீங்கிவிடும்.

கரும்புள்ளிகள் மறைய:

1)எலுமிச்சை சாறு
2)ரோஸ் வாட்டர்
3)வைட்டமின் ஈ மாத்திரை

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு,ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துவிடவும்.பிறகு அதில் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து கரும்புள்ளிகள் மீது அப்ளை செய்து வந்தால் சில தினங்களில் அவை மறைந்துவிடும்.

உதடு சிவப்பழகு பெற:

1)கிளிசரின்
2)வைட்டமின் ஈ மாத்திரை

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கிளிசரின் மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.இதை உதடுகளில் அப்ளை செய்து வந்தால் கருமையான உதடு சிவப்பாக மாறும்.

முடி வளர்ச்சி அதிகரிக்க:

1)வைட்டமின் ஈ மாத்திரை
2)தேங்காய் எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.பிறகு இதை தலைக்கு அப்ளை செய்து குளிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

கருவளையம் நீங்க:

1)பாதாம் எண்ணெய்
2)வைட்டமின் ஈ மாத்திரை

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து மிக்ஸ் செய்து கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கருவளையம் நீங்கிவிடும்.

முகம் வெள்ளையாக:

1)கஸ்தூரி மஞ்சள்
2)வைட்டமின் ஈ
2)தேன்

ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள்,ஒரு தேக்கரண்டி தேனை பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.பிறகு அதில் ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை அப்ளை செய்து முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் முகம் வெள்ளையாகும்.

Exit mobile version