Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீர்க்கடுப்பு முதல் மலச்சிக்கல் வரை.. இந்த ஒரு விதையை தண்ணீரில் ஊறவைத்து குடித்தாலே நோய்கள் தீரும்!!

திருநீற்றுப் பச்சிலை என்ற மூலிகை தாவரத்தில் கிடைக்கும் சப்ஜா விதைகள் தோற்றத்தில் சிறியதாக இருந்தாலும் இதில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.கடைகளில் கிடைக்கும் பழச்சாறு,ஐஸ்க்ரீம் போன்றவற்றில் இந்த சப்ஜா விதைகளை காணலாம்.அதேபோல் தயிர்,புட்டிங்ஸ் போன்றவற்றிலும் சேர்க்கப்படுகிறது.

சப்ஜா விதைகள் குளிர்ச்சி தன்மை நிறைந்தவையாக இருப்பதால் உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம்.

சப்ஜா விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

1)துத்தநாகம்
2)வைட்டமின் ஏ
3)வைட்டமின் பி
4)வைட்டமின் சி
5)சல்பர்

சப்ஜா விதை ஆரோக்கிய நன்மைகள்:-

**குடல் மற்றும் வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் சப்ஜா விதைக்கு இருக்கிறது.சப்ஜா விதைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு பிரச்சனை ஏற்படாது.

**உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க உடலை வலுப்படுத்த சப்ஜா விதைகளை உட்கொள்ளலாம்.

**சப்ஜா விதை நநீரை பருகினால் பசி கட்டுப்படும்.இதனால் உடல் எடையை எளிதில் குறைக்க முடியும்.

**செரிமானப் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது.குடல் இயக்கத்திற்கு வழி வகுக்கிறது.

**இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சப்ஜா விதை பயன்படுத்தும் முறை:

தேவையான பொருட்கள்:-

1)சப்ஜா விதை – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சப்ஜா விதை சேர்த்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

மறுநாள் இந்த சப்ஜா விதை நீரில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து நன்றாக கலந்து பருக வேண்டும்.இப்படி செய்ய விருப்பம் இல்லாதவர்கள் வெறும் சப்ஜா விதைகளை மட்டும் வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள் போதும்.

யார் சப்ஜா விதைகளை சாப்பிடக் கூடாது?

இந்த சப்ஜா விதைகளை பிறந்த குழந்தைக்கு கொடுக்க கூடாது.அதேபோல் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சப்ஜா விதையை தவிர்ப்பது நல்லது.அதேபோல் ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் சப்ஜா விதைகளை தவிர்க்க வேண்டும்.

Exit mobile version