Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாயுக் கோளாறு முதல் புளி ஏப்பம் வரை.. இந்த ஐந்து பொருட்களை அரைத்து 10 கிராம் அளவு சாப்பிடுங்கள்!!

நாம் உட்கொள்ளும் சில வகை உணவுகள் செரிமானப் பிரச்சனை,வாயுக் கோளாறு,புளி ஏப்பம்,வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.இந்த தொந்தரவுகளில் இருந்து மீள இந்த சூரணம் செய்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – 50 கிராம்
2)ஒமம் – 25 கிராம்
3)திப்பிலி – 10 கிராம்
4)கருப்பு மிளகு – 25 கிராம்
5)பெருஞ்சீரகம் – 25 கிராம்
6)நெய் – 20 மில்லி

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் வாணலி வைத்து 20 மில்லி பசு நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு நெயில் 50 கிராம் சீரகம்,25 கிராம் ஓமம்,10 கிராம் திப்பிலியை முதலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து அதில் 25 கிராம் கருப்பு மிளகு,25 கிராம் பெருஞ்சீரகம் சேர்த்து குறைவான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

3.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

4.அடுத்து அடுப்பில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்த வாயு சூரணத்தை 10 கிராம் அளவிற்கு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

5.அடுத்து இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் வாயுத் தொல்லை,செரிமானப் பிரச்சனை,புளி ஏப்பம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)இலவங்கப்பட்டை – ஒரு துண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.இலவங்கப்பட்டை ஒரு துண்டு எடுத்து பாத்திரத்தில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

2.பின்னர் இந்த இலவங்கப்பட்டை துண்டை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.பின்னர் ஒரு கிண்ணத்தை எடுத்து அரைத்த இலவங்கப்பட்டை பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு தூயத் தேனை அதில் போட்டு மிக்ஸ் குழைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வாயுத் தொல்லை,செரிமானக் கோளாறு,புளி ஏப்பப் பிரச்சனை குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)ஓமம் – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் ஓமத்தை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு இதை மிக்சர் ஜார் அல்லது கல்வத்தில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.

3.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் அரைத்த பெருஞ்சீரகம்,ஓமப் பொடியை போட்டு கொதிக்க வைத்து கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

4.பின்னர் இந்த பானத்தில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்து பருகினால் புளித்த ஏப்பம்,வாயுத் தொல்லை,செரிமானப் பிரச்சனை உள்ளிட்ட பாதிப்பு சரியாகும்.

Exit mobile version