தலைவலி முதல் கால் வலி வரை.. அனைத்தையும் விரட்டும் பாட்டி வைத்தியம்!!

0
131
From headache to leg pain.

உடலில் ஏற்படும் சிறு சிறு பாதிப்புகளை குணமாக்க மருத்துவரை நாடாமல் பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பலனடையுங்கள்.

1)தலைவலி

சிறிதளவு நொச்சி இலையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும்.அதேபோல் இரண்டு அல்லது மூன்று வெள்ளைப் பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி விடும்.

2)வாய்ப்புண்

நாவல் விதையை பவுடராக்கி தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.மணத்தக்காளி கீரையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

3)சேற்றுப்புண்

ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளில் சிறிதளவு தேன் சேர்த்து குழைத்து கால் விரல்களில் பூசி வந்தால் சேற்றுப்புண் ஆறும்.

4)தொண்டைப் புண்

சித்தரத்தையை இடித்து தூளாக்கி தூயத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.

5)சிறுநீர்ப் பை வீக்கம்

அருகம்புல்லை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்துபருகி வந்தால் சிறுநீர்ப்பை வீக்கம் குறையும்.

6)வாய் துர்நாற்றம்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

7)இரத்த சோகை

தினமும் ஒரு மாதுளம் பழத்தை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை நீங்கும்.

8)உதடு வெடிப்பு

தேங்காய் எண்ணையில் தேன் கலந்து உதடுகளுக்கு அப்ளை செய்து வந்தால் உதடு வெடிப்பு நீங்கும்.

9)மூட்டு வலி

தினமும் இரவு வெது வெதுப்பான நீரில் மூட்டுகளுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.பிறகு மூட்டு பகுதியில் நல்லெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யவும்.இப்படி தினமும் செய்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.

10)கால் வலி

எருக்க இலையில் தேங்காய் எண்ணெய் தடவி தோசைக் கல்லில் வைத்து சூடாக்கவும்.இந்த சூடான எருக்க இலையை கால் வலி உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.