பொதுவாக வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.தினசரி உணவு உட்கொண்ட பிறகு ஏதேனும் ஒரு வகை வாழைப்பழத்தை உட்கொண்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடலாம்.
சிலருக்கு சாப்பிட்ட பிறகு வயிறு உப்பசமாகும்.சிலருக்கு மலக் கழிவுகள் குடலில் தேங்கி பல உபாதைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது நன்மை பயக்கும்.
வாழைப்பழம் ஒரு இயற்கை மலமிளகியாக செயல்படுகிறது.தேன் வாழை,பச்சை வாழை,மொந்தன் வாழை,பூவன்,செவ்வாழை என்று வெரைட்டி வெரைட்டியாக இருக்கிறது.இந்த வாழைப்பழத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டிருக்கும் பழம் செவ்வாழை.இதில் வைட்டமின் சி,இரும்பு,நார்ச்சத்து,பீட்டா கரோட்டின்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
செவ்வாழைப்பழம் மற்ற வாழைப்பழத்தைவிடவும் நிறம் மற்றும் சுவையில் சற்று வித்தியாசத்தை கொண்டிருக்கிறது.இந்த பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் மருத்துவர்களே இதை சாப்பிட பரிந்துரை செய்கின்றனர்.
செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 48 தினங்கள் அதாவது ஒரு மண்டலம் வரை தினமும் ஒன்று என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
48 நாட்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1.தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை சரியாகும்.செவ்வாழைப்பழம் இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
2.கண் கோளாறுகளை சரி செய்ய தினமும் ஒரு செவ்வாழைப்பழம் உட்கொள்ள வேண்டும்.பழத்தில் இருக்கின்ற வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
3.ஆண்மையை அதிகரிக்க செவ்வாழைப்பழத்தை பசும் பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.ஆண்கள் நரம்பு தளர்ச்சி வராமல் இருக்க தினமும் ஒரு செவ்வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.
4.கருப்பை சம்மந்தமான பிரச்சனைகளால் அவதியடைந்து வரும் பெண்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.
5.செரிமானக் கோளாறை சரி செய்யும் அருமருந்தாக செவ்வாழை திகழ்கின்றது.உணவு உட்கொண்ட பின்னர் சிறிது நேரம் கழித்து ஒரு செவ்வாழைப்பழத்தை உட்கொண்டால் அஜீரணக் கோளாறு சரியாகும்.
6.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் செவ்வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.