இனிமேல் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்!! அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணையம்!! 

0
117
From now on AIADMK general secretary is EPS!! The Election Commission approved!!

இனிமேல் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்!! அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணையம்!! 

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னால் அதிமுகவில் யார் பொது செயலாளர் என்பதில் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது.  இந்த சூழ்நிலையில் அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமையிலான அணியே அதிமுக என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.

பொதுக்குழு  மற்றும் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு யார் என்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் தேர்தல் ஆணையம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுக்குழு தொடர்பாக கடந்த 30-5-2023 அன்று இபிஎஸ் தரப்பில் இருந்து அதிமுகவின் பொதுக்குழு அடிப்படையில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்னன்ன என்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கும் வகையில் ஒரு கடிதம் அனுப்பபட்டது.

அந்த கடித்ததில் அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிக்கு யார் யாரெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பன குறித்த விவரங்கள் அந்த கடிதத்தில் அதிமுக தரப்பில் எடப்பாடி குழுவினர் அனுப்பி இருந்தனர்.

அதிமுக கொடுத்த இந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாக உறுதியாகிறது.

அதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இபிஎஸ் தரப்பு ஆவணங்களும் அந்த இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை முழுமையாக அங்கீகாரம் செய்ததை காட்டுகிறது. இனிமேல் நீதிமன்ற தீர்ப்புகள் வந்தால் ஏதேனும் மாறுபாடு இருக்குமே தவிர அதுவரை தற்போது போல கட்சி செயல்படும் என்பது தெரிகிறது.