Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி இவருக்கு மாதச் சம்பளம் 55 லட்சம் ரூபாய்! டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு!!

இனி இவருக்கு மாதச் சம்பளம் 55 லட்சம் ரூபாய்! டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு!!

 

டெக் மாஹிந்திரா நிறுவனத்தின் நிறுவனத்தின் இயக்குநராகவும், தலலமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வரும் அனிஷ் ஷா அவர்களுக்கு மாதச் சம்பளம் தற்போது 55 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அவர் தற்பொழுது வாங்கும் சம்பளத்தை விட சுமார் 83 சதவீதம் அதிகமாகும்.

 

அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் முதல் அனிஷ் ஷா அவர்களுக்கு மாதச் சம்பளம் 30 லட்சம் ரூபாயில் இருந்து 55 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று டெக் மஹிந்தகரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஊதியம் அனிஷ் ஷா அவர்களின் செயல்திறனையும் நிர்வாகத்தின் செயல்திறனையும் அடிப்படையாகக் கொண்டு இந்த வருடம் முதல் அதாவது 2023 முதல் 2025 வருடம் வரை வழங்கப்படவுள்ளது.

 

மேலும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆட்டோ மொபைல் பிரிவை வழிநடத்தி வரும் நிர்வாக இரயக்குநர் ராஜேஸ் ஜெஜூரிகர் அவர்களுக்கும் மாதச் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது ஆட்டோ மொபைல் நிர்வாக இயக்குநர் ராஜேஸ் ஜெஜுரிகர் மாதம் 26 லட்சம் ரூபாய் பெற்று வரும் நிலையில் அவருக்கு மாதச் சம்பளம் 48 லட்சம் ரூபாயாக வழங்கப்படும் என்று டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஊதியம் ராஜேஷ் அவர்களுக்கு செயல்திறன் மற்றும் நிர்வாகத்தின் செயல் திறனை அடிப்படையாகக் கொண்டு இந்த வருடம்(2023) முதல் 2025 வரை வழங்கப்படும் என்று டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

 

2023ம் ஆண்டுக்கான நிதியாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனம் 34 சதவீதம் அதிக இலாபம் ஈட்டியுள்ளது. இதன்மூலம் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் இலாபம் 1,21, 269 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து டெக் மஹிந்திரா நிறுவனம் 10,282 கோடி நிகர லாபத்தையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version