Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 இனிமேல் இவை  தீங்கு என கண்டறியப்பட்டால்  அரசு தாராளமாய்  தடை விதிக்கலாம் !  சென்னை ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு !! 

#image_title

இனிமேல் இவை  தீங்கு என கண்டறியப்பட்டால்  அரசு தாராளமாய்  தடை விதிக்கலாம் !  சென்னை ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு !! 

புகையிலை பொருட்கள் தீங்கு விளைவிப்பதாக அரசுக்கு தெரிய வந்தால் தாரளமாக தடை விதிக்கலாம் என ஐகோர்ட்டு அதிரடியாக அறிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றினை தொடுத்தது.  அரசுக்கு எதிராக தொடுக்கக்கப்பட்ட வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது,

நாங்கள் புகையிலை தொடர்பான பொருட்கள் இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறோம். எனவே அரசானது உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டத்தின் படி இறக்குமதியை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கூடாது என கோரப்பட்டு இருந்தது.

இது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே நடைபெற்ற இரட்டை நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை சுட்டிக்காட்டி மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவு புகையிலை அளவு (நிக்கோடின்) இருந்தால் அந்த பொருட்களை தடை செய்யும் உரிமை மாநில அரசுக்கு உண்டு.அது மட்டுமில்லாமல் அந்த பொருட்கள் தொடர்பான இறக்குமதிக்கு தடை உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரமும் உண்டு என தீர்ப்பு வழங்கி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

புகையிலை பொருளான ஹான்சில் 1.8% நிக்கோடின் உள்ளது. அது மக்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதால் அதற்கு அனுமதிக்க முடியாது என அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார். தொழில் மேற்கொள்வது அடிப்படை உரிமை என்றாலும், தொடங்கும் தொழிலானது அரசு விதிகளுக்கு முழுமையாக உட்பட்டது என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். எனவே இனிமேல் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த புகையிலை பொருட்கள் வந்தாலும் அதனை அரசு தடை செய்யும் அதிகாரம் முழுமையாக உண்டு எனத் தெரிய வந்துள்ளது.

Exit mobile version