இனிமேல் அனுமதியின்றி இதை அச்சடித்துக் கொடுத்தால் சிறை தண்டனை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!!

0
178
From now on, if you print this without permission, you will be jailed!! District Collector action alert!!

இனிமேல் அனுமதியின்றி இதை அச்சடித்துக் கொடுத்தால் சிறை தண்டனை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!!

இனிவரும் காலங்களில் பேனர் வைப்பதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். அங்ஙனம் அனுமதியின்றி பேனர் வைப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் அந்த பேனரை அச்சடித்துக் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் மக்கள் அதிகம் உள்ளனரோ? இல்லையோ? அதிகம் பேனர்களும் விளம்பர பலகைகளும் இடம் பிடித்துள்ளன. இவ்வாறு முறை இன்றி வைக்கப்படும் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகளால் விபத்துக்கள்,போக்குவரத்து நெரிசல்  ஏற்படுவது உண்டு.

இதற்கு முன் அதிமுக கட்சியினர் வைத்த பேனரால் சுபஸ்ரீ என்ற பெண் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது உயிரிழந்தார். அது முதல் அனுமதியின்றி பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகளை வைப்பதற்கு தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உரிய அனுமதி பெறாமல் பேனர் மற்றும் விளம்பர பலகைகளை வைப்பவர்கள் இது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் 25 ஆயிரம் வரை அபராதமும் சம்பந்தப்பட்டவர்கள் மீது விதிக்கப்படும். இதையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அரசின் இந்த நடவடிக்கைகளை பின்பற்றும் பொருட்டு சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அங்கு கடலூர் மாநகராட்சி எல்லைக்குள் அனுமதி இன்றி பேனர் வைத்தாலோ, பேனர்கள் வைப்பவர்கள் மற்றும் அதனை அச்சடித்து கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை அளித்துள்ளார்.

அவர் கூறுகையில் அனுமதி இன்றி பேனர் வைப்பவர்கள் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்த அவர் இவ்வாறு கட்டுப்பாடற்ற  முறையில் ஏராளமான பேனர்கள் வைப்பதால் போக்குவரத்துக்கு கடுமையான இடையூறு ஏற்படவதாகவும் தெரிவித்துள்ளார்.