Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுங்க சாவடிகள் ரத்து! மத்திய அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மேலை நாடுகளில் சாலைப்போக்குவரத்து மிகவும் பாதுகாப்பானதாக இருந்து வருகிறது அதோடு சாலையில் செல்வோருக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டாலும் உடனடியாக அவருக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.மேலும் மேலை நாடுகளில் சாலை விபத்துக்கள் நடைபெறுவதே மிக மிகக் கடினம் என்ற சூழ்நிலை காணப்படுகிறது.

ஆனால் அங்கெல்லாம் அதிக வரி வசூலிப்பு நடைபெறுவதில்லை ஆனால் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

போதாக்குறைக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு அங்கும் வரிகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.இத்தனை நடந்தாலும் சாலை விபத்துக்கள் குறைக்கப்படுகின்றனவா என்று பார்த்தால் அதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.இதையெல்லாம் கவனித்த சமூக ஆர்வலர்கள் இந்தியா சாலை போக்குவரத்தில் புதியதொரு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி அடுத்த நிதியாண்டு தொடங்குகின்ற சூழ்நிலையில், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை துறைகளுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்குவது குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது இதுதொடர்பாக மக்களவையில் அந்தத் துறையின் அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துப் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, டெல்லி அம்ரிஸ்டர் கத்ரா விரைவுச் தயாராகிவருகிறது. என்றும், டெல்லி, அம்ரிஸ்டர் இடையிலான சாலை பணிகள் இந்த வருடம் இறுதிக்குள் நிறைவு பெற்று விடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த தூரத்தை 4 மணி நேரத்தில் சென்றடைந்து விடலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதே போல டெல்லி- ஜெய்ப்பூர் டெல்லி- மும்பை டெல்லி- டேராடூன் விரைவு சாலைகளும் இந்த வருட இறுதிக்குள் புதிதாக கட்டமைக்கப்படும் என்று நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

ஜெய்ப்பூர் டேராடூன் சாலைகளின் பயண நேரம் இரண்டு மணி நேரமாக இருக்கலாம் அதேசமயம் டில்லி மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு இடையிலான பயண தூரம் 12 மணி நேரமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் லே நெடுஞ்சாலையின் 11,650 அடி உயர ஜோஷில நெடுஞ்சாலையின் கீழ் அமையவிருக்கும் சுரங்கப்பாதை 2024 ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் சாலை பாதுகாப்பை பொருத்தவரையில் தற்சமயம் அனைத்து கார்களும் 6 ஏர் பேக்குடன் தான் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது உலக வங்கி தமிழகத்துடன் இணைந்து பணி செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் நிதின் கட்கரி

ஆகவே அவர்கள் அதன் மூலமாக சாலை விபத்துக்களை குறைத்திருக்கின்றன நாம் தமிழகத்தின் முன்மாதிரியை செயல்படுத்த உத்தேசமாகவிருக்கிறோம். 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைவெளியிலிருக்கும் சுங்க சாவடிகள் மூடப்படும் இந்த 60 கிலோ மீட்டர் இடைவெளிக்கிடையில் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version