Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனிமேல் நடைபாதையில் வசிப்பவர்களுக்கும் உரிமைத் தொகை!! மாநகராட்சி கமிஷனர் அதிரடி!! 

From now on the right amount for those who live on the footpath!! Corporation Commissioner action!!

From now on the right amount for those who live on the footpath!! Corporation Commissioner action!!

இனிமேல் நடைபாதையில் வசிப்பவர்களுக்கும் உரிமைத் தொகை!! மாநகராட்சி கமிஷனர் அதிரடி!! 

நடைபாதையில் வசித்து வரும் மக்களுக்கு இனிமேல் உரிமைத்தொகை  வழங்க ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி கமிஷ்னர் டாக்டர் ராதாக்ருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நடைபாதை மற்றும் சாலையோரத்தில்  வசிக்கும், மக்களுக்கும் இனிமேல்  உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கு புதிதாக   வங்கிகளில் அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி அதன்மூலம் உரிமைத்தொகையானது கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார்.

மகளிர்க்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை தமிழக அரசால் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டமானது செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் அன்று முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பேர் சூட்டப்பட்டு, அதை செயல்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைத்து  ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அரசு சார்பில் இதற்காக விண்ணப்ப படிவம் தயாரிக்கப்பட்டு, வீடு, வீடாக இந்த படிவத்தை ரேசன் கடை ஊழியர்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  அதேபோல் இந்த திட்டம் தலைநகர் சென்னையில் மாநகராட்சி கமிஷ்னர் டாக்டர் ஜே. ராதாக்ருஷ்ணன் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த உள்ளனர். இதற்கென விண்ணப்ப படிவம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுப் பற்றி சென்னை மாநகராட்சி கமிஷ்னர் டாக்டர் ஜே. ராதாக்ருஷ்ணன் கூறியதாவது,

தமிழக அரசு வழங்க உள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்கள்  வீடு, வீடாக வழங்கவும் , பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்ப படிவத்தை திரும்ப பெறுவதற்கும் அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம். மேலும் ரேஷன் கார்டு எண்ணிக்கைக்கு தகுந்தவாறு  பள்ளிகள், சமுதாயக்கூடங்கள், மற்றும் அரசு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்க முடிவு  செய்யப்பட்டு உள்ளது.

படிவம் கொண்டு வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மற்றும் கூட்ட நெரிசலை தடுக்க ஒரு நாளைக்கு ஒரு ரேசன் கடைக்கு 50 முதல் 60 பேர் வரை மற்றும் வரவைத்து விண்ணப்பம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.  மேலும் ஒரு பொறுப்பு அதிகாரி, வரி மதிப்பீட்டாளர், சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர் ஒவ்வொரு முகாமுக்கும்  நியமிக்கப்பட உள்ளனர்.

அரசு அறிவித்த தேதியில் விண்ணப்படிவம் வழங்கப்படும். சென்னையில் பல ஏழை எளிய மக்கள் ரேசன் அட்டை இல்லாமல் இருக்கலாம். எனவே நடைபாதையில் வசிப்பவர்கள், ஆதரவற்றோர், இரவு நேர காப்பகங்களில் உள்ள பெண்கள் ஆகியோரை கண்டறிந்து ரேஷன் அட்டை கிடைக்க ஏற்பாடு செய்து, உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். வங்கி கணக்கு இல்லாத பெண்களுக்கும் வங்கியில் புதிய கணக்கு தொடங்கி உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. உண்மையான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக் கூடாது என்பதில் குறிக்கோளாக கொண்டுள்ளோம்.

Exit mobile version