பைல்ஸ் முதல் பல் பிரச்சனை வரை.. தேங்காய் மட்டை தான் மருந்து!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

0
168
From piles to tooth problems.. Coconut is the cure!! Oh, I didn't know this for so long!!

சரும பிரச்சனை,அல்சர்,முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தேங்காய் பால்,தேங்காய் எண்ணெய் தீர்வாக இருக்கிறது.அதேபோல் உடல் சூடு,சிறுநீரகக் கோளாறு,சீதபேதி போன்ற பாதிப்புகளுக்கு தேங்காய் நீர்,இளநீர் மருந்தாக பயன்படுகிறது .

மேலும் தேங்காய் பருப்பு உணவின் சுவையை கூட்டும் மூலப் பொருளாக திகழ்கிறது.தேங்காய் மட்டையில் இருந்து காயை மட்டும் பிரித்தெடுத்து பயன்படுத்தும் நாம் அந்த மட்டையின் பலன் தெரியாமல் தூக்கி எறிந்துவிடுகின்றோம்.ஆனால் இந்த தேங்காய் மட்டையும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடிய ஒரு பொருள் தான் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

தேங்காய் மட்டையில் பயன்கள்:

காயங்களை குணமாக்கும் தேங்காய் மட்டை

உங்களது உடலில் காயங்கள் இருந்தால் அதை ஆற்ற தேங்காய் மட்டையுடன் சிறிது மஞ்சள் தூளை பயன்படுத்தலாம்.முதலில் தேவையான அளவு தேங்காய் மட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து காயங்கள் மீது பூசினால் சில’தினங்களில் அவை ஆறிவிடும்.

பல் மஞ்சள் கறையை போக்கும் தேங்காய் மட்டை

பற்களில் மஞ்சள் கறைகள் இருந்தால் அதை தேங்காய் மட்டையை வைத்து போக்க முடியும்.முதலில் சிறிதளவு தேங்காய் மட்டையை நெருப்பில் எரித்து பொடியாக்கி சிறிது சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.பிறகு சிறிது நீர் சேர்த்து குழைத்து பற்களை தேய்த்தால் மஞ்சள் கறை நீங்கிவிடும்.

மூல நோயை குணமாக்கும் தேங்காய் மட்டை

பைல்ஸ் பாதிப்பு இருப்பவர்கள் தேங்காய் மட்டையை அரைத்து நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம்.

நரை முடியை கருப்பாக்கும் தேங்காய் மட்டை

தலையில் வெள்ளை முடி இருந்தால் அதை கருமையாக்க ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இதற்கு மாற்று தேங்காய் மட்டையை சூடாக்கி பொடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்தால் வெள்ளை முடி கருமையாக மாறும்.