அரசியல் முதல் சினிமா வரை தேனி மாவட்டத்தினர் தான்! இந்நாள் வரை இம்மாவட்டம் வளரவில்லை! பொதுமக்களின் குமுறல்!
தேனி மாவட்டம்மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் பெரியகுளம் பகுதியில்அமைந்துள்ள கும்பக்கரை மற்றும் சோத்துப்பாறை போன்ற இயற்கை வளம் மிகுந்த சுற்றுலாத்தலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில்இயங்கி வருகிறது.இங்கு அனைத்து நாட்களிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதியிலிருந்தும்சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்வந்து இயற்கை வளங்களை கண்டு களித்து குளித்து மகிழ்கின்றனர்.
மலை சார்ந்த பகுதி என்பதால் இங்கு காட்டு விலங்குகளும் அரிய வகை மூலிகை மருந்து செடிகளும் விலை உயர்ந்த மரங்களும்வனத்துறை மற்றும் காவல் துறையினால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.மேலும் இப்பகுதி முன்னாள்முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த ஊராகும்என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்திற்கு நிறைய சினிமா துறையின் கலைஞர்களையும் முக்கிய அரசியல்வாதிகளையும் பெற்றுக் கொடுத்த தொகுதி தேனி மாவட்டம் ஆகும்.
இருந்த போதிலும் இத்தொகுதியில்சென்னை ,திருப்பூர் ,திண்டுக்கல், மதுரை போன்ற நகரங்கள் போன்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை என்பது பொது மக்களின்நீண்டகால மனக்குறை யாவும் குமரலாகவும் இருந்து கொண்டே உள்ளது.தற்சமயம் இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள்இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் நவக்கரை மற்றும் சோத்துப்பாறை மஞ்சளாறு அணை போன்ற பகுதிகளில் குழந்தைகள் விளையாடுவதற்கான ஒரு விளையாட்டு பூங்கா கூட இல்லை .
தங்களின் மணக்குரையை பத்திரிக்கை செய்தி வாயிலாக வெளியிட்டு அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தங்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.