இனி சுய உதவி குழுக்களுக்கு ரூ 12 லட்சத்தில் இருந்து ரூ 20 லட்சம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!
தமிழகத்தில் பல கிராமத்தில் இந்த சுய உதவி குழு நடைபெற்று வருகிறது. ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்கள் 12 அல்லது 20 பேர் சேர்ந்து அவரவர் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து ஒரு குழுவாக செயல்படுவதே சுய உதவிக்குழு. இதன்மூலம் பல பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த சுய உதவி குழு மூலம் சிறு சேமிப்பு என்று அவர்களால் முடிந்த தொகையை சேமித்து வருவர். மேலும் ஒவ்வொரு சுய உதவி குழு விற்கும் ரூ 10 முதல் 20 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
சுய உதவிக் குழுவினர் மற்ற நபர்களுக்கு அதனை பிரித்துக் கொடுத்து வருவது வழக்கம். அனைத்து சுய உதவி குழு விற்கும் எப்பொழுதும் ரூ 10 லட்சம் மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது பட்ஜெட் தொடர் முடிந்து நேற்று முதல் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ரீதியான கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பதில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை உயர்த்தப் பட வேண்டும் என தெரிவித்தார்.
மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள் என அனைத்து நிறுவனங்களிலும் சுய உதவி குழுக்களுக்கு ரூ 12 லட்சம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வரும் ஆண்டு முதல் இந்த நிறுவனங்கள் அனைத்திலும் 2 லட்சத்திலிருந்து ரூ 20 லட்சம் வரை உயர்த்தப்படும் என தெரிவித்தார். மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்கும் நோக்கில் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் இனி நகரும் கூட்டுறவு வங்கி என்ற புதிய சேவையை தொடங்க இருப்பதாக அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.