Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உயர் நீதிமன்ற பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல்!

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வருகின்ற எட்டாம் தேதி முதல் வழக்குகளை விசாரிக்க இருக்கும் நீதிபதிகளின் விவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி நீதிபதிகள் ராஜா, வேல்முருகன், உள்ளிட்டோர் கொண்ட முதல் பெஞ்ச் அமர்வு பொதுநல வழக்குகள் மற்றும் ரிட் மனுக்கள் மற்றும் 2018 ஆம் ஆண்டு முதல் தாக்கலாகி நிலுவையில் இருக்கக்கூடிய அப்பீல் மனுக்கள், கிரிமினல், அவமதிப்பு மற்றும் அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுக்கள் உள்ளிட்டவற்றை விசாரிக்கின்றனர்.

இரண்டாவது பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் ஆட்கொணர்வு மனுக்கள் அனைத்து கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பெண்கள், குழந்தைகளுக்கு, எதிரான குற்றச்சாட்டுக்கள் உட்பட 2017 ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்யப்பட்ட ரிட் அப்பீல் மனுக்கள் அனைத்து சிவில் அப்பீல் மனுக்கள் உள்ளிட்டவற்றை விசாரிக்க இருக்கின்றன.

நீதிபதி எம் சுந்தர் வரி குறித்த ரிட் மனுக்கள், மோட்டார் வாகன வரி, ஏற்றுமதி, இறக்குமதி உட்பட சுங்கம் மற்றும் மத்திய கலால் வரி, வனம் மற்றும் தொழில்துறை அறநிலையத்துறை தொடர்பான மனுக்களை விசாரிக்க இருக்கிறார். நீதிபதி நிஷா பானு கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கு கூடிய இரண்டாம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்க இருக்கிறார். நீதிபதி அனிதா சுமந்து 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டு இறுதியில் இருக்கக்கூடிய தொழிலாளர் மற்றும் பணியாளர் தொடர்பான ரிட் மனுக்களை விசாரிக்க இருக்கின்றார்.

நீதிபதி கார்த்திகேயன் சிறு , கனிமம் மற்றும் தாதுக்கள் நில சீர்திருத்தம், நில குத்தகை, நகர நில வரையறை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிலச் சட்டம் குறித்த மனுக்களை மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் சுதந்திர போராட்ட தியாகி பென்சன் திட்டம் மற்ற பெஞ்சுகளில் குறிப்பிடப்படாத வகை ரிட் மனுக்களை விசாரிக்க இருக்கின்றார்.

நீதிபதி பவானி சுப்பராயன் 2011 முதல் தாக்கலாகி நிலுவையில் இருக்கக்கூடிய இரண்டாம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்க இருக்கின்றார். அதேபோல குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 407 மற்றும் 482 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் மனுக்களை அதோடு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கடந்த இந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கின்றார் நீதிபதி சாமிநாதன்.

அதேபோல நீதிபதி தாரணி கிரிமினல் அப்பீல் மனுக்கள் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அப்பீல் மனுக்கள் கிரிமினல் ரிவிஷன் மனுக்களை விசாரிக்க இருக்கின்றார் அதேபோல நீதிபதி ஆஷா சிவில் ரிவிஷன் மனுக்கள், இடமாற்றத்தின் மற்றும் நிறுவனங்களின் அப்பீல் மனுக்களை விசாரிக்க இழக்கின்றார்.

நீதிபதி புகழேந்தி சென்ற வருடம் முதல் தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் மற்றும் பணியாளர் குறித்த ரிட் மனுக்களை விசாரிக்க இருக்கிறார், நீதிபதி இளங்கோவன் சிபிஐ ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் முன் ஜாமின் மனுக்களை தவிர்த்து குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவுகள் 507 மற்றும் 482 உள்ளிட்டவற்றின் கீழ் தாக்கல் செய்யப்படும். கிரிமினல் மனுக்கள் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 2019 ஆம் வருடம் வரையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இருக்கக்கூடிய ரிட் மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்தி சிவில் வழக்குகளில் அப்பீல் மனுக்கள் சிபில் சிறு வழக்குகள் இரண்டாம் நிலை அப்பீல் மனுக்கள் மற்றும் முதல் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்க இருக்கின்றார். இந்த தகவல்கள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை வெளியிட்டிருக்கிறது.

Exit mobile version