Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று முதல் இது மீண்டும் நடைமுறை! மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

From today it is practical again! Announcement issued by the Electricity Board!

From today it is practical again! Announcement issued by the Electricity Board!

இன்று முதல் இது மீண்டும் நடைமுறை! மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா தொற்று முதல் அலையின் போது மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது பலர் வேலை வாய்ப்புகள் இன்றியும் இருந்தனர்.ஓர் சிலர்  அரசின் நலத்திடங்களையே வைத்தே வாழ்க்கையை நகர்த்தினர்.அச்சமையம் மக்கள் வேலை வாய்புகள் இன்றி இருந்ததால் மக்கள் நலன் கருதி அதிமுக அரசானது மக்கள் லோன் கட்டுவது,கடன் பெற்றவர்கள் திரும்ப கேட்பது என ஆரம்பித்து பலவற்றைக்கு தடை விதித்திருந்தது.அதுமட்டுமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கும் அதிமுக அரசாங்கம் கால அவகாசத்தை நீடித்தது.அந்தவகையில் மக்கள் 2019 ஆம் ஆண்டு கட்ட தவறிய மின் கட்டணம் போன்றவற்றை கணக்கில் வைத்து ஜூன் மாதம் வரை தவணை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து தற்போது திமுக ஆட்சி மாறிய சூலில் கொரோனாவின் 2 வது அலை உருவானது.இந்த அலையில் மக்கள் பெருமளவு பாதிப்பிற்குள்ளானர்கள்.பல ஆயிரம் கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.கொரோனா தொற்று அதிகளவு அதிகரித்த காரணத்தினால் மீண்டும் அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.ஆனால் இம்முறை கடன் கட்டுவது,மின் கட்டணம் செலுத்துவது என எவ்விதத்திற்கும் கால அவகாசத்தை அரசாங்கம் தர வில்லை.

அதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக,மின் வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று கணக்கு எடுக்கும் பணியை தற்காலிகமாக நிறுந்திவைத்திருந்தனர்.அதனையடுத்து அவரரவர் மின் கட்டணத்தை செல்போன் மூலம் கணக்கிட்டு மின் கட்டணம் செலுத்தும் படி அரசாங்கம் கூறியது.அது சரியான நடைமுறைக்கு வராத காரணத்தினாலும்,தற்போது கொரோனா தொற்று குறைந்த காரணத்தினாலும் தற்போது,மீண்டும் மின் வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மின் கட்டணத்தை கணக்கெடுக்கும் முறையை தொடங்குகிறது என தெரிவித்துள்ளனர்.

அதனால் இனி மின் கட்டணத்தை கணக்கெடுக்கும் பணி முன்பைப்போல நடைமுறைக்கு வருகிறது.இம்முறை அரசாங்கம் எவ்வித கால அவகாசத்தையும் மின் கட்டணம் செலுத்துவதற்கு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இம்முறையும் மக்கள் ஊரடங்கு நாட்களில் வேலை வாய்ப்புகள் இன்றி இருந்ததால் மின் கட்டணம் செலுத்துவதற்கு சற்று கால அவகாசம் கொடுத்தால் ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version