நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!!

0
117
#image_title

நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!!

1)நீங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும் போது வீட்டிற்கு உண்ட வேலைகள் என்னென்ன இருக்கிறதோ அவற்றையெல்லாம் கேட்டு வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் முடித்துவிட்டு வருவதினால் பெட்ரோல் செலவு மிச்சம் ஆகும். இதனால் அடிக்கடி பெட்ரோல் போடும் சூழல் ஏற்படாது.

2)வீட்டிலேயே தயிர் ஊற்றி வைத்துக் கொள்வதால் வெளியில் தயிர் வாங்குவது மிச்சம் ஆகும். இதனால் பணம் சேமிக்க படுவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

3)மீன் வாங்க செல்லும் போது மீனை கடையில் சுத்தம் செய்து வெட்டி கொடுப்பதற்கு ஒரு கிலோவுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை வசூலிப்பார்கள். மீனை வாங்கி வந்து நாமே சுத்தம் செய்வதன் மூலம் அந்த பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

4)கடையில் இட்லி அரிசி வாங்கி மாவு அரைப்பதை விட ரேஷனில் கொடுக்கப்படும் அரிசியை பயன்படுத்தி மாவு அரைத்து இட்லி, தோசை செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். இதன் மூலம் இட்லி அரிசி வாங்கும் செலவு மிச்சமாகும்.

5)வேலைக்கு செல்பவர்கள் தினமும் கடையில் டீ, காபி வாங்கி குடிக்காமல் அவற்றை வீட்டிலேயே தயார் செய்து பிளாஸ்க்கில் ஊற்றி எடுத்து சென்றால் வெளியில் வாங்கி பருகும் செலவு மிச்சமாகும்.

6)வருட கடைசியில் நம் பிள்ளைகளின் நோட்களில் உள்ள காலி பக்கங்களை கிழித்து தனியாக ஒரு நோட் போல் தயார் செய்து பிள்ளைகளுக்கு ரஃப் யூஸுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் நோட் வாங்குவது தவிர்க்கப்பட்டு காணசமான தொகையை சேமிக்க முடியும்.

7)ஹோட்டலில் உணவு வாங்குவதை தவிர்த்து வீட்டில் சமைத்து சாப்பிடுவதன் மூலம் பணம் மிச்சமாகும்.