Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது இல்லாததால் கல்லூரியில் சேர முடியாத விரக்தி!  மாணவி எடுத்த விபரீத முடிவு போராட்டத்தில் உறவினர்கள்! 

#image_title

இது இல்லாததால் கல்லூரியில் சேர முடியாத விரக்தி!  மாணவி எடுத்த விபரீத முடிவு போராட்டத்தில் உறவினர்கள்! 

கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பத்தை கல்லூரி நிர்வாகம் நிராகரித்ததால் மாணவி விபரீத முடிவை எடுத்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பான இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு பிளஸ் டூ படித்த மாணவி தற்கொலை முடிவு எடுத்ததால் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் டூ முடித்த மாணவி ஒருவர் மேற்படிப்பு பயல்வதற்காக பல்வேறு கல்லூரியில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தபடி அவர் சாதி சான்றிதழை இணைக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு எந்த கல்லூரியிலும் சேர்ந்து பயில முடியாத சூழ்நிலை உருவானது.

கடும் விரக்தியில் இருந்த அந்த மாணவிக்கு தன்னுடன் படித்து சக மாணவிகள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மனைவியின் உறவினர்கள்   திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாதி சான்றிதழ் வழங்க கோரி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து மாணவியின்  உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர்.

Exit mobile version