இன்று முழு அடைப்பு போராட்டம்! சட்டத்தின் தீர்ப்பை எதிர்க்கும் மக்கள்!
கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதித்தனர். அவ்வாறு தடை விதித்ததும் மாணவர்களுக்கு இடையே கலவரம் நடக்கத் தொடங்கியது.கர்நாடக மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் பி.யூ கல்லூரியில் படிக்கும் சில முஸ்லிம் மாணவர்கள் வகுப்பறைக்குள் பர்தா அணிந்து வந்துள்ளனர். அவர்கள் பர்தா அணிந்து வந்ததால் மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக அந்த முஸ்லிம் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து தர்ணா போராட்டதில் இறங்கினர். அத்தோடு தாங்கள் படிக்கும் கல்லூரி நிர்வாகம் தங்கள் அணியும் உடை சம்பந்தமான காரியங்களில் தலையிடுவதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
இந்த பர்தா அணியும் விவகாரம் குறித்து கர்நாடக உள்துறை மந்திரி அரக ஞானேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேட்டி அளித்த விதம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், பர்தா காவி துண்டு ஆகியவற்றை கல்லூரிக்குள் அனுமதிக்க முடியாது. அதேபோல மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிக்க மட்டுமே வருகின்றனர் அதை தவிர்த்து பூஜை வழிபாடு போன்றவை நடத்த அல்ல. அதனால் ஹிஜாப் ,காவி துண்டு ஆகியவற்றை அணிந்து மத அடையாளங்களை காட்டும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது எனக் கூறினார். இவ்வாறான மத அடையாளங்களை அவரவர் வழிபாட்டு தாளங்களுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியது கலவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அடுத்து கர்நாடக அரசும்,மாணவர்கள் அவரவர்குறிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என உத்தரவிட்டது. கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தினர். மேலும் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் முடிவானது நேற்று வெளிவந்தது. நேற்று வழக்கின் முடிவு வெளிவர இருந்ததால் கர்நாடக முழுவதும் 144 தடை உத்தரவு அதுமட்டுமின்றி முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணியையும் போராட்டம் நடத்த தடை . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் நேற்று உயர்நீதிமன்றத்தில் வழக்கின் முடிவு வெளியானது.
அதில் நீதிபதி கூறியதாவது, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானது அல்ல எனக் கூறினர். எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்தது இனி நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தனர். மேலும் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது தடை தடையை எதிர்த்து மாணவிகள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இவ்வாறு தீர்ப்பளித்ததை எடுத்து இன்று சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதை விளைவாக கர்நாடகா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.