இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு? ஒரு நாளில் 5 லட்சம் தொற்று பாதிப்பு ?

0
139
Infections are less! Relaxation to be demolished?

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு? ஒரு நாளில் 5 லட்சம் தொற்று பாதிப்பு ?

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் தொற்றிலிருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கை தொடங்கி வருகின்றனர்.அவ்வாறு மீண்டும் வலக்கையை தொடங்கும் போதெல்லாம் தொற்றானது உரு மாற்றம் அடைந்து மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.அரசாங்கமும் மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.தற்போது தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்றானது உரு மாற்றம் அடைந்து ஒமைக்ரானாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.

அந்த ஒமைக்ரான் தொற்றானது தற்பொழுது அனைத்து நாட்டிலும் தீவிரமாக பரவி வருகிறது.தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.நமது மத்திய அரசும் மாநிலங்களில் ஏற்படும் தொற்று பாதிப்பிற்கேற்ப கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளனர்.அந்த உத்தரவின் பேரில் மாநில அரசு ஊரடங்கை அம்ப்படுத்தி வருகிறது.நாளுக்கு நாள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது நேற்று மட்டும் இந்தியாவில் ஒரே நாளில்1லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் திடிக்கிடும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய சுதந்திரமான சுகாதார ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.இந்த சுகாதார ஆராய்ச்சி மையம் தலைவர் கிறிஸ்டோபர் முராரே அவர் எந்தெந்த நாடுகள் இந்த ஒமைக்ரான் தொற்றால் அதிக பாதிப்பை சந்திக்கும் என ஆராய்ச்சி செய்துள்ளார் அதில் இந்தியாவில் அடுத்த மாதம் முதல் 1நாளில் மட்டும் 5 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உண்டாகும் என கூறியுள்ளார்.

அந்தவகையில் பார்க்கும் பொழுது அடுத்த மாதம் முதல் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு போட அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறுகின்றனர்.மேலும் சென்ற முறை டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பின் போது அதிக உயரிழப்புகளை சந்தித்தோம்.ஆனால் இந்த ஒமைக்ரான் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படாது எனவும் இந்த ஆராய்ச்சியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.