Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! நாளை நடக்கயிருக்கும் திடீர் ஆலோசனை!

Lockdown again! Edappadi's emergency consultation meeting!

Lockdown again! Edappadi's emergency consultation meeting!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! நாளை நடக்கயிருக்கும் திடீர் ஆலோசனை!

கொரோனா தொற்றானது இந்த வருடம் சற்று குறைந்த நிலையில் மீண்டும் ருத்ரதாண்டவம் எடுக்க ஆரம்பித்துள்ளது.அதுவும் நான்காம் இடத்தில கொரோனா பாதிப்பிலிருந்த இந்தியா தற்போது மூன்றாம் இடத்தை நோக்கி சென்றுள்ளது.தற்போது தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும் தடுப்பூசி செலுத்திகொண்டவர்களுக்கே கொரோனா பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்தியாவில் தமிழ்நாடு,ஒடிசா,மகராஷ்டிரா,குஜராத்,கேரளா போன்ற மாநிலங்களில் அதிக அளவு தொற்று பரவிய மாநிலங்களாக கூறி வருகின்றனர்.தற்போது அதிக தொற்று பரவிய மாநிலங்களின் முதல்வர்களை நரேந்திர மோடி காணொளியில் சந்தித்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை போட்டார்.கொரோனா தொற்றை கட்டுபடுத்த மத்திய அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தி தான் வருகிறது.

அப்படி அதிக அளவு திட்டங்களை செயல்படுத்தி வந்தும் ஒரு நாளில் மட்டும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகி வருகிறது.அந்தவகையில் அன்று காணொளி ஆலோசனையின் மூலன் நம் தமிழ்நாட்டிற்கு கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கை போட்டனர்.இருப்பினும் தொற்று பல மடங்கு வேகத்தில் பரவுவதால் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சர்கள் மற்றும் சுகாதார செயலாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக்கூட்டமானது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு என அனைவரும் கூறுகின்றனர்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில்  கட்டுப்பாடுகளை மேலும் வலுபடுத்த முடிவுகள் எடுப்பதாக கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி அதிக அளவு கொரோனா தொற்று பரவுவதால் முழு ஊரடங்கு பற்றியும் முடிவுகள் எடுக்கப்படலாம் என சுற்றுவட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

Exit mobile version