Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்ந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு  வந்தன. இந்நிலையில் மூன்றாம் கட்ட தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

இரவு நேர ஊரடங்கு ரத்து
5-ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்படலாம்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு
சமூக இடைவெளியுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்
யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி.

Exit mobile version