வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு! உயர்நீதிமன்றம் வெளியிடும் திடீர் அறவிப்பு!

0
115
New order issued by the Election Commission! Change at the end of the election?

வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு! உயர்நீதிமன்றம் வெளியிடும் திடீர் அறவிப்பு!

கொரோனா தொடர்ந்து ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.அந்தவகையில் சென்ற ஆண்டு அதிக அளவு கொரோனா தொற்றானது காணப்பட்டதால்,7 மாதங்களுக்கு மேல் மக்களின் நலன் கருதி ஊரடங்கை அமல்படுத்தினர்.அத்ர்கடத்து கொரோனா தொற்றானது சிறிது குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதி தந்தனர்.ஆனால் மக்கள் சிறிது நாட்கள் மட்டுமே கொரோன தொற்றின் விதிமுறைகளை பின்பற்றினர்.அதன்பின் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாழ ஆரம்பித்துவிட்டனர்.

அதன் விளைவாக தற்போது அதிக அளவு கொரோனா தொற்றானது பரவ ஆரம்பித்துவிட்டது.தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்ததால்,வேட்பாளர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமலே பிரச்சாராம் செய்தனர்.அதனால் பல தலைவர்கள் மற்றும் மக்களுக்கும் கொரோனா தொற்று தற்பொழுது உறுதியாகி உள்ளது.அதனையடுத்து கொரோனா தொற்று எல்லை மீறி பரவ ஆரம்பித்ததால் தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கையும்,வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு அமல் படுத்தியும் அதிக அளவு கொரோனா தொற்று பரவுவதால் முழு ஊரடங்கு போடுவதற்கு பரிந்துரை செய்து வருகின்றனர்.அந்தவகையில் மே 2 –ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க  இருக்கிறது.அந்த இரு நாட்கள் பரபரப்புடன் காணப்படுவதால் முழு ஊரடங்கை அமல்படுத்தும் படி உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது.தற்போது கரூர் மாவட்டம் மீண்டும் வாக்கு பதிவு நடத்த இருக்கிறது.அதிக அளவு கொரோனா தொற்று பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என உயர் நீதி மன்ற கூறியது.இந்த கரூர் மாவட்டத்தில் முறையாக கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இவ்வாறு பல நடவடிக்கை எடுத்து வருவதால் வாக்கு எண்ணிக்கையின் போதும் முழு ஊரடங்கை அமல்படுத்தப்படும் என கூறுகின்றனர்.