நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.இந்த ஊரடங்கு காலத்தின் போது அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வேறு எந்த கடைகளுக்கோ அல்லது பெரிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், செயல்படுவதற்கான அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.அதேபோல இந்த 14 நாட்களிலும் டாஸ்மாக் கடைகளும் முழுமையாக மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதனையடுத்து வாரம்தோறும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு வந்தது. ஆனால் நேற்றைய தினம் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் நேற்று முழு ஊரடங்கு போடப்படவில்லை இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடத் தொடங்கியது.இதன் காரணமாக, கடந்த இரு தினங்களில் மது விற்பனை வெகுவாக அதிகரித்தது. இவ்வாறான சூழ்நிலையில், நேற்று ஒரே தினத்தில் மட்டும் தமிழகத்தில் 428 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றிருக்கிறது.
அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 98 கோடியே 96 லட்சம் ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 97 கோடி ரூபாய்க்கும் அதேபோல திருச்சி மண்டலத்தில் 87 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றிருக்கிறது.சேலம் மாவட்டத்தில் 76 கோடி ரூபாய்க்கும் கோவையில் 67 கோடி ரூபாய்க்கு மது விற்பனையை நடந்திருக்கிறது. கடந்த இரு தினங்களில் 855 கோடிக்கு மதுவிற்பனை நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.