பட்டா மற்றும் சிட்டா குறித்த பல சந்தேகங்கள் இன்றளவும் சிலருடைய மனதில் இருந்து கொண்டே வருகிறது. அவற்றை முழுமையாக நீக்கும் வண்ணம் இந்த பதிவு அமைந்திருக்கிறது.
பட்டா :-
பட்டா என்பது ஒருவருடைய நிலத்துக்காக வருவாய்த்துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும். அதாவது ஒருவர் தன்னுடைய சொத்து மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணத்தை தான் பட்டா என்பார்கள்.
அரசாங்கம் வழங்கும் இந்த ஆவணத்தில், பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம், மற்றும் ஓனரின் பெயர், சர்வே நம்பர், உட்பிரிவு, நன்செய் நிலம் / புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி, தீர்வை விவரங்கள் இப்படி அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
சிட்டா :-
பட்டாவின் ஒரு பகுதியை தான் சிட்டா என அழைப்பார்கள். சிட்டாவில் நிலம் குறித்த சில முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதாவது, ஒருவருடைய சொத்து எந்த பகுதியில் அமைந்துள்ளது? அதன் அளவுகள் என்னென்ன? அந்த நிலத்துக்கு யார் ஓனர்? அந்த நிலம் நஞ்சையா? புஞ்சையா? வறண்ட நிலமா? ஈர நிலமா? போன்ற விவரங்கள் அடங்கியவை ஆகும்.
பட்டா மற்றும் சிட்டாவில் பெயர் மாற்றம் செய்ய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் :-
அந்தந்த பகுதியில் உள்ள தாலுகா அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள பட்டா பரிமாற்ற படிவத்தில், தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, கையொப்பமிட்ட விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பித்தால், 15 முதல் 30 நாட்களுக்குள் புதிய பட்டாக்கள் கிடைத்துவிடும்.
பட்டா மற்றும் சிட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு ஆன்லைனில் எந்த விதமான வழிமுறைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிலம் தொடர்பான சேவைகளைப் பெற மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் :-
தமிழக அரசு பல்வேறு இணையதளங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள வேண்டுமானால், https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தை அணுகலாம், இதில், தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற்ற பயனடையலாம்.