Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் இலவச அடுப்பு, சிலிண்டர் பெறுவது குறித்த முழு விளக்கம்!

#image_title

உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் இலவச அடுப்பு, சிலிண்டர் பெறுவது குறித்த முழு விளக்கம்!

நாட்டில் உள்ள ஏழை பெண்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களில் உஜ்வாலா திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் மூலம் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் இணைப்பு பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்பொழுது வரை லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றது. பொதுவாக கேஸ் நிறுவனத்தின் மூலம் சிலிண்டர் இணைப்பு பெற வேண்டும் என்றால் ரூ.7000 முதல் ரூ.8000 வரை கொடுக்க வேண்டும். ஆனால் இந்த உஜ்வாலா திட்டத்தின் மூலம் விலையின்றி கேஸ் மற்றும் அடுப்பு கிடைக்க பெறுவதால் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தில் சேர முக்கிய தகுதி ஆகும்.
அடுத்து திட்டத்தில் சேர விரும்பும் பெண்களின் குடும்பம் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்.

திருமணமான பெண்கள், வயதான பெண்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் சேர வேண்டும் என்றால் இதுவரை அவர்கள் கேஸ் இணைப்பு பெற்றிருக்க கூடாது.

18 வயதை நிறைவு செய்த பெண்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
தங்களுக்கு அருகில் உள்ள கேஸ் ஆபிஸுக்கு சென்றும் உஜ்வாலா திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். ஆன்லைன் மூலமும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.

கேஸ் ஆபிஸில் இதற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் புதிதாக திருமணம் ஆன பெண்கள் திருமண பத்திரிகை, தங்கள் மற்றும் தங்கள் கணவரின் ஆதார் நகல், விண்ணப்பிக்கும் பெண்களின் வங்கி கணக்கு எண் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு உள்ளிட்டவை கொடுத்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.

உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டது என்றால் 1 அல்லது 2 மாதங்களில் இலவச அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்பட்டு விடும்.

இந்த திட்டத்தில் சேர நீங்களே ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய விருப்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்.

1)https://pmuy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2)ஆதார் எண், வசிப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் விவரம் மற்றும் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றவும்.

உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஒரு மாதத்தில் இலவச கேஸ் மற்றும் சிலிண்டர் இணைப்பு கேஸ் நிறுவனம் மூலம் வழங்கப்படும்.

Exit mobile version