Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக விவசாயிகளின் போராட்டம்! வைகோவின் ஆதரவு!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விதமாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் நடந்து வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கின்றார். மத்திய அரசு கொண்டுவந்திருக்கின்ற மூன்று வேளாண் வேணான் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் வாபஸ் பெற தெரிவித்து, கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி முதல் லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் .மத்திய அரசின் சார்பாக விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் இருக்கும் நேரத்தில் இந்தப் போராட்டத்தை இன்னும் வலுப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் இறங்கியிருக்கிறார்கள்.

நாட்டுடைய முதுகெலும்பாக விளங்கிவரும் விவசாயத்துறையை முற்றிலுமாக சீர்குலைக்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயத்தை தாரைவார்த்துக் கொடுக்கும் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு, ஒருபோதும் அனுமதி வழங்க இயலாது என்று விவசாயிகள் தெரிவித்து வருகிறார்கள். அதோடு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற இயலாது என்று மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், டிசம்பர் மாதம் 14ம் தேதி முதல் ரயில் மறியல் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் என்று பலர் அப்போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் விவசாயிகள் சார்பாக அறைகூவல் விடுக்கப்பட்டது. விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் தொடர்ச்சியான காத்திருப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு தீர்மானித்திருக்கிறது.

அந்த தீர்மானத்தின் படி இன்றைய தினம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடரும் காத்திருப்பு போராட்டத்திற்கு, தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதோடு தமிழகம் முழுவதும் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தனது ஆதரவை தெரிவித்து வருகின்றார்.

Exit mobile version