Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் நிதியுதவி ! முதிர்வு தொகை பெற அழைப்பு!

Girl Child Protection Scheme Funding! Maturity Amount Call to get!

Girl Child Protection Scheme Funding! Maturity Amount Call to get!

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் நிதியுதவி ! முதிர்வு தொகை பெற அழைப்பு!

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பெண் குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்யப்படும் தொகை முதிர்வடைந்த உடன் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, இரண்டு பெண் குழந்தைகளை உடைய, ஆண்டு வருமானம், 72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள பெற்றோர் விண்ணப்பிக்கலாம். அதன் படி, அரசின் சார்பில், குழந்தைகளின் பெயரில் குறிப்பிட்ட தொகை வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். குழந்தைகளுக்கு, 18 வயது நிறைவடையும் போது, பயனாளிகள் அந்த நிதியை, வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம்.

இத்தகைய 12 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து திட்டத்தின் பதிவு செய்தவர்கள் தங்களது முதிர்வு தொகைக்காக சேமிப்பு பத்திரங்களை பெற்றுக் கொள்ள அன்னூர் வட்டார சமூக நலத்துறை அதிகாரிகள் அனுப்பி விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு 18 வயது முதிர்ந்த முடிவடைந்த உடன் முடிவடைந்து இருந்தால் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கி சேமித்து கணக்கு நகல், போட்டோ,பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன்  அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Exit mobile version