மடிக்கணினி மற்றும் டேப் வழங்கிய உதயநிதி! மாணவர்கள் மனதில் ரியல் ஹீரோவாக இடம் பெற்றார்!

0
154
Funds provided by Laptop and Tape! He became a real hero in the minds of students!

மடிக்கணினி மற்றும் டேப் வழங்கிய உதயநிதி! மாணவர்கள் மனதில் ரியல் ஹீரோவாக இடம் பெற்றார்!

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்து இரு மாதங்கள் ஆகிறது.தற்போது வரை திமுக பல நலத்திட்ட உதவிகளை தமிழகத்திற்கு செய்து வருகிறது.அத்தோடு அவரது மகன் உதயநிதி அவர்களும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியை மாடர்ன் சிட்டியாக மாற்ற முயற்சித்து வருகிறார்.உதயநிதி அவர்கள் தான் நின்ற தொகுதியில் வீடு வீடாக சென்று மக்கள் கூறும் கோரிக்கைகளை கேட்டு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.முதலில் அந்த தொகுதியில் அங்கு சாக்டை தேங்கி கிடந்ததை நேரில் கண்டு ஒர் நாளிலேயே சுத்தம் செய்து அம்மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக இடம் பிடித்தார்.

அதனையடுத்து வீடு இல்லாத ஓர் வயதான பாட்டியின் வீட்டிற்கு சென்று வீடு கட்டித்தர நடவடிக்கை எடுத்தார்.ஓட்டு கேட்கும் போது மட்டும் மக்களை நாடி வந்து சாக்கடைகளில் இறங்கியும்,மக்களுடன் மக்களாக நடந்துக்கொண்டும் இருக்கு மத்தியில்,தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி அவர்கள் அவர் தொகுதியில் எந்த குறைகளும் கூறாத வண்ணம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி கொரோனா நிதி தற்போது தமிழ்நாடு முழுவதும் திரட்டப்பட்டு வருகிறது.சிறிய பெண் குழந்தை தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிதிக்காக உதயநிதியிடம் வழங்கியது.அப்பொழுது உதயநிதி இந்த பணத்தை நீங்கள் எதற்காக சேர்த்து வைத்தீர்கள் எனக் கேட்டார்.அதற்கு அந்த குழந்தை நான் சைக்கில் வாங்குவதற்காக சேர்த்து வைத்தேன் என்றார்.அடுத்த நாளே அந்த குழந்தைக்கு சைக்கில் வழங்கி அந்த குழந்தையை மகிழ்வித்தார்.

இத்தகைய செயல்களால் உதயநிதி,இளைஞர்கள் மனதில் பெருமளவு இடம் பிடித்துள்ளார்.தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளில் உள்ள மக்களிம் பல கோரிக்கைகளை கேட்டறிந்தார்.அப்பொழுது அதிக பட்ச கோரிக்கையாக இருந்தது,தற்போது கொரோனா தொற்று பரவலால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.சில வீடுகளில் மொபைல் வாங்கித்தர வசதிகள் இல்லாததால் அதனை கோரிக்கையாக உதயநிதியிடம் கூறியுள்ளனர்.

அந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அத்தொகுதியில் பயிலும் 51 மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் டேப் வழங்கியுள்ளார்.மடிக்கணினி மற்றும் டேப் பெற்ற மாணவர்கள் மிகவும் உறச்சகமடைந்தனர்.அதுமட்டுமின்றி சில மாணவர்களுக்கு அவர் படிப்பதற்காக உதவி தொகையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.