Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவியின் படிப்பிற்காக பிரபல இசையமைப்பாளர் செய்த செயல்!! நெகிழ்ச்சி சம்பவம்!!

மாணவியின் படிப்பிற்காக பிரபல இசையமைப்பாளர் செய்த செயல்!! நெகிழ்ச்சி சம்பவம்!!

கோலிவுட் சினிமாவில் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் தான் ஜி.வி.பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அத்துடன் இவரது அடுத்த படத்தின் பாடலான கிரீடம் படத்தின் பாடல்களும் வரவேற்பை பெற்று இருந்தது. இதனையடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் என்ற தமிழ் படத்தின் மூலமாக பாடகராக இவர் அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் பென்சில் போன்ற படங்களிலும் கதாநாயகராக நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் தற்போது ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கண்டன்ட் குரூப்’ இணைந்து வழங்கும் வெப்ஸீரிசான ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்ற டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை பாடியுள்ளார்.

இதுதான் ஜிவி பிரகாஷ் முதல்முறையாக வெப்சீரிஸில் பாடுவது. அத்துடன் இந்த பாடலை பாடியதற்காக தனக்கு தரப்பட்ட ஊதியத்தை முதுகலை மாணவி ஒருவரின் படிப்பிற்கு ஒதுக்குவதாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். மேலும், ஜி.வி.பிரகாஷின் இந்த செயலுக்கு பல தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து ‘ஆதலினால் காதல் செய்வீர்’ டைட்டில் பாடல் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version