விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்!!! கடுமையாக உயர்ந்துள்ள பழங்கள், பூக்களின் விலை!!!
விநாயகர் சதுர்த்தி விழா நாளை(செப்டம்பர்18) கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பழங்கள், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளை(செப்டம்பர்18) விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடபடவுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடத்தி கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட வித்தியாசமான சிலைகள் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே சிலை தயாரிக்கும் கலைஞர்கள் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாளை(செப்டம்பர்18) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடபடவுள்ள நிலையில் தமிழகத்தில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை கோயம்பேடு சந்தை உள்பட கடலூர் சந்தை, திருச்சி காந்தி மார்கெட், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், கன்னியாகுமரி தேவாளை ஆகிய சந்தைகளில் பூக்கள், பழங்கள் விலை உயர்ந்துள்ளது. மேலும் சில காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
குறிப்பாக பூக்களின் விலை கடந்த வாரத்தின் விலையை விட இந்த வாரம் இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் பூ வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகை நாளில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அளித்திருந்தாலும் பொதுமக்கள் இடையே பெரும் அதிருப்தியை அளித்துள்ளது.
தற்பொழுது பன்னீர் ரோஜா கிலோ 160 ரூபாய்க்கும், மல்லிகைப் பூ கிலோ 800 ரூபாய்க்கும், முல்லைப் பூ கிலோ 800 ரூபாய்க்கும், கனகாம்பரம் பூ கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதே போல ஆப்பிள் கிலோ 140 ரூபாய்க்கும், வாழைப்பழம் 100 ரூபாய்க்கும், மாதுளை பழம் கிலோ 160 ரூபாய்க்கும், திராட்சை கிலோ 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே போல சில காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.