அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:! விநாயகரை வழிபடும் முறை மற்றும் நேரம்!
ஓம் என்ற மந்திரத்திற்குரிய முழுமுதல் கடவுளான விநாயகர் பிறந்த தினம் இன்று. எளியோருக்கு மிக இனிய கடவுளாக பிள்ளையார் திகழ்கின்றார்.எந்த ஒரு நல்ல காரியமும் தொடங்குவதற்கு முன்பும் நம் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரமிப்போம்.இதற்கு காரணம் காரிய தடைகளை நீக்குவதில் வல்லமை படைத்தவர் இந்த கணேசன்.இதுபோன்று அனைத்து செயலிருக்கும் முதலில் திகழும் விநாயகரை அவர் பிறந்த நாளில் நாம் வழிபட்டால் அனைத்து விதமான சகல சௌபாக்கியங்களும் நமக்கு விரைவில் கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.
இவ்வளவு சிறப்புமிக்க பிள்ளையார் சதுர்த்தி நாளன்று பிள்ளையாரை வழிபடும் முறை மற்றும் வழிபடுவதற்கு ஏற்ற நேரத்தைப்பற்றி
தெரிந்துகொள்ளுங்கள்!
பிள்ளையாரை வழிபடும் முறை
பிள்ளையார் சிலையை வாங்கி வந்தவர்கள் அல்லது வீட்டில் வைத்திருக்கும் சிலையை வைத்து எளிய பூஜை செய்ய நினைப்பவர்கள் என அனைவரும் இந்த பூஜை முறையை பின்பற்றலாம்.
பிள்ளையார் சிலையை முதலில் அருகம்புல் மாலை அல்லது வெள்ளை எருக்கன் மாலை அல்லது கொண்டை கடலை மாலை அணிவித்து குங்குமம் பொட்டு வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.
பின்னர் அவருக்கு அருகில் ஒரு தாம்புல தட்டில் வாழை இலை வைத்து அதில் அர்ச்சனை அரிசி வைக்க வேண்டும்.இந்த அரிசியின் மேல் ஒரு கலசத்தை வைக்கவேண்டும்.
அதாவது செம்பிலான சொம்பு அல்லது சிறிய குடத்தை குங்குமத்தால் பொட்டு வைத்து சிறிதளவு பூ சுற்றி அதன்பின் இந்த கலசத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு வைக்க வேண்டும்.
பின்னர் இந்த கலசத்தின் மீது தேங்காய் ஒன்றை வைக்க வேண்டும்.அந்த தேங்காயில் புள்ளையார் சுழியிட்டு பின்னர் தேங்காய் சுற்றிலும் மூன்று வெற்றிலையை வைக்கவேண்டும்.
பின்னர் இந்த கலசத்திற்கு அருகில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.பின்னர் விநாயகருக்கு உகந்த கொழுக்கட்டை,சர்க்கரைப் பொங்கல்,சுண்டல், போன்றவற்றை நெய்வேத்தியமாக படைத்து,தீப தூப ஆராதனைகள் காட்டி மனதார பிள்ளையாரை நாம் வழிபட்டால்,தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.விநாயகர் சதுர்த்தியன்று இந்த முறையில் விநாயகரை வழிபட்டால், புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம்கிட்டும் என்பது ஐதீகம்.
விநாயகரை வழிபடுவதற்கான நல்ல நேரம்
காலை: 7.45 முதல் 8.45
மதியம்: 12.15 முதல் 1.15
மாலை: 6 மணிக்கு மேல்
பொதுவாக பிள்ளையாரை மாலை 6 மணிக்கு மேல் வழிபடுவது மிகவும் உகந்ததாகும்.