Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் காற்றில் பறப்பு!

விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் காற்றில் பறப்பு!

நேற்று விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்கவோ அல்லது ஊர்வலமாக சென்ற நீர்நிலையில் கரைக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும் அவரவர்கள் வீட்டில் வைத்து விநாயகர் சிலையை வழிபடலாம் என்றும்,விநாயகர் சிலையை நீர்நிலைகளில்கரைக்க ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசால்
அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தேனி மாவட்டத்தில் விதிகளை மீறி,இந்து அமைப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றது பெரும் பரபரப்பையும்,சட்டத்தின் மீதான அவமதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதனைக் கண்டித்த போலீசாருக்கும்,இந்து அமைப்பினருக்கும் இடையே கடும்எதிர்ப்பு நிலவி வருகிறது.

Exit mobile version