விநாயகர் சிலைகளை இப்படி தான் கரைக்க வேண்டும்!!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம்!!!

0
183
#image_title

விநாயகர் சிலைகளை இப்படி தான் கரைக்க வேண்டும்!!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம்!!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகளை எவ்வாறு கரைக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜித்து வழிபட்டனர். பொது இடங்களிலும், வீதிகளிலும் மக்கள் ஒன்றாக கூடி பெரிய பெரிய விநாயகர் சிலைகளை வைத்து பூஜை சொய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

விநாயகர் சிலைகள் மூன்று நாட்கள் வைத்து வழிபாடு நடத்தியபின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளில் கரைக்கக்கப்படும். அந்த வகையில் இன்று(செப்டம்பர்20), நாளை(21) இரண்டு நாட்களும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படவுள்ளது. இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்…

* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் எளிமையாக கலையாக கூடிய வகையில் களிமண், காகிதக் கூழ், இயற்கையான வண்ணங்கள் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

* விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு எடுத்துச் செல்லும் முன்பு விநாயகர் சிலைகளில் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்ட தோரணங்கள், பூ மாலைகள், துணிகள், செயற்கை ஆபரணங்கள், இலைகள் ஆகியவற்றை அகற்றி விட வேண்டும்.

* விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் சேகரிக்கப்படும் பூ மாலைகள், தோரணங்கள், துணிகள் போன்ற அலங்காரப் பொருள்கள் அனைத்தையும் முறையாக சேகரிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளால் அகற்றப்பட வேண்டும். மேலும் திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாள வேண்டும்.

* அலங்காரப் பொருட்களில் மீண்டும் பயன்படுத்தப்பட கூடிய துணி வகைகள் இருந்தால் அதை மீண்டும் மறுசுழற்சி செய்து இல்லங்களின் பயன்பாட்டுக்கு அனுப்பலாம். மூங்கில், மரக்கட்டைகள் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் இருந்தாலும் அதையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம்.

* விநாயகர் சிலைகளில் இருந்து அகற்றப்பட்ட துணிகள், பூ மாலைகள், மூங்கில்கள் போன்ற அலங்காரப் பொருட்களை ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒன்றாக குவித்து தீயிட்டு எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

* வீடுகளில் வைத்து பூஜை செய்து வழிபட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வீடுகளில் பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி அதில் கரைக்கலாம். பின்னர் அந்த நீரை வடிகால்களில் வெளியேற்றலாம். மண்ணை வீடுகளின் தோட்டத்தில் வைத்து செடி வளர்க்க பயன்படுத்தலாம்.