12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்!! உங்கள் ராசிக்குரிய விநாயகர் எது தெரியுமா?

0
78
#image_title

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்!! உங்கள் ராசிக்குரிய விநாயகர் எது தெரியுமா?

1)மேஷம்: மனோதைரியம் மிக்கவர் நீங்கள். செவ்வாயின் ஆதிக்கத்தை பெற்ற நீங்கள் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். நீங்கள் வழிபட வேண்டிய விநாயகர் “வீர கணபதி”.

2)ரிஷபம்: நீங்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்று அம்பிகையின் பரிபூரண அருளுக்கு பாத்திரமானவர்கள். நீங்கள் வழிபட வேண்டிய விநாயகர் ராஜ ராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள “ஸ்ரீவித்யா கணபதி”.

3)மிதுனம்: பல்வேறு திறமையை உடைய உங்களின் திறமைக்கும், வளர்ச்சிக்கும் மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதலிலிருந்து விடுபட நீங்கள் வழிபட வேண்டிய விநாயகர் “லட்சுமி கணபதி”.

4)கடகம் – ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டுபவர். நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். நீங்கள் வழிபட வேண்டிய விநாயகர் “ஹேரம்ப கணபதி”.

5)சிம்மம்: இயற்கையில் தைரிய குணமிக்க உங்களுக்கு என்றுமே வெற்றி தரும் மகள் துணை நிற்பாள். அசாத்தியமான மன வலிமையுடன் என்னவென்றும் வெற்றியினை ருசித்து வரும் நீங்கள் வழிபட வேண்டிய விநாயகர் “விஜய கணபதி”.

6)கன்னி: மென்மையான குணத்தினை உடையவர் நீங்கள். உங்களின் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து செயல்படும் போது உங்களை வல்ல எவராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்குரியவர் “மோகன கணபதி”.

7)துலாம்: அயராத உழைப்பினை உடைய நீங்கள் மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓயமாட்டீர்கள். உங்களின் வழிபாட்டிற்கு உரிய விநாயகர் வெற்றி கணபதி.

8)விருச்சிகம்: மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது சதா பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். எப்பொழுதும் பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டிய விநாயகர் சக்தி கணபதி.

9)தனுசு: குருபகவானின் ஆதிக்கத்தை பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்.தர்ம நெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் உங்களுக்கு “சங்கடஹர கணபதி” வழிபாட்டிற்கு உகந்தவர்.

10)மகரம் – தியாக உள்ளம் கொண்ட நீங்கள் உங்கள் மனதினை அடக்கியாள கற்றுக் கொண்டவர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் “யோக கணபதி”.

11)கும்பம் – புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக் கொள்ளும் தனித் திறமை பெற்றவர் நீங்கள். அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கியாள நினைப்பீர்கள். நீங்கள் வழிபட வேண்டிய விநாயகர் “சித்தி கணபதி”.

12)மீனம் – கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையவர் நீங்கள். தான் நினைத்தை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் “பால கணபதி”.