Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..!

#image_title

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..!

உலகின் முதற் மூத்தக்கடவுள் விநாயகரை வணங்கினால் சகல நன்மைகளும் கிடைத்து வாழ்க்கை மேன்மேலும் வளர்ச்சி அடைய முடியும்.

‘வினை தீர்ப்பவன் விநாயகன்’ என்ற பெயரைக் கொண்டவர். நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என்றால் விநாயகப்பெருமான் அருள் முழுமையாக கிடைக்க வேண்டும்.

விநாயகர் சிலை பெரும்பாலும் மரத்தடியில் தான் இருக்கும். மரம் என்றால் நம் நினைவுக்கு வருவது அரச மரம் தான். ஆனால் பிள்ளையார் சிலை அரச மரத்தடியில் மட்டும் அல்ல… வில்வம், ஆலமரம், வேப்பமரம், வன்னி ஆகிய மரங்களுக்கு அடியிலும் இருக்கும்.

இதில் எந்த மரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அனைவரும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் அரச மரத்தடி பிள்ளையாரை வணங்கினால் கிடைக்கும் பலன்களை அறிவோம்…

அரச மரத்தடி பிள்ளையார் குழந்தை பாக்கியத்தை கொடுப்பபவர். வினைகளை தீர்ப்பவர்.

ஆலமரத்தடி பிள்ளையாரை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்…

ஆலமரத்தின் அடியில் உள்ள பிள்ளையாரை வணங்கி வர தீராத நோய்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் எற்படும்.

வேப்பமரத்தடி பிள்ளையார்…

இவரை வணங்கினால் தங்கள் மனதுக்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

வன்னி மரத்தடி பிள்ளையார்…

வன்னி மரத்தின் அடியில் உள்ள பிள்ளையாரை வணங்கி வர குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். செல்வம் பெருகி… மகிழ்ச்சி கிட்டும்.

Exit mobile version