Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாமக கூட்டணியால் தான் இபிஎஸ் அதிமுக ஆட்சியை தக்க வைக்க முடிந்தது – முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் பதிலடி 

A. Ganeshkumar

A. Ganeshkumar

பாமக கூட்டணியால் தான் இபிஎஸ் அதிமுக ஆட்சியை தக்க வைக்க முடிந்தது – முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் பதிலடி

சில தினங்களுக்கு முன் பாமக சார்பில் நடத்தப்பட்ட புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினார்.

அப்போது அவர் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளை நேரிடையாகவும், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியை மறைமுகமாகவும் விமர்சனம் செய்திருந்தார்.இந்நிலையில் அவர் அதிமுக குறித்து அக்கட்சி நான்காக உடைந்துள்ளது என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து பதிலளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அன்புமணி ராமதாஸ் பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது பாமகவுக்கு தேர்தல் அங்கீகாரமே அதிமுகவால் தான் கிடைத்தது என விமர்சித்து பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து அவரின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாமகவின் முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அதில் 1998 இல் ராமதாஸை தேடி வந்து கூட்டணி வைத்தது ஜெயலலிதா தான்,மேலும் 2019 இல் நடந்த இடைத்தேர்தலில் பாமக கூட்டணியால் தான் இபிஎஸ் அதிமுக ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version