மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்கை அமரன்!! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன!!

0
149
Ganga Amaran admitted to hospital!! What happened at the shooting spot!!

இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகங்களை தன்னகத்தே கொண்டவர் கங்கை அமரன் அவர்கள். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும் ஆவார்.2017 ஏப்ரலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த இடைத்தேர்தல் ஆனது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு படங்களை இயக்கிய கங்கை அமரன் அவர்கள் கரகாட்டக்காரன் படத்தில் உள்ள இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட கங்கை அமரன் அவர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

திரைப்படத்தின் ஷூட்டிங் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிவகங்கைக்கு சென்ற கங்கை அமரன் அவர்கள், சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் பொழுது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மட்டுமே வெளிவந்துள்ள நிலையில், என்ன நடந்தது? ஏன் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் என்ற எந்த எந்த விதமான கேள்விகளுக்கும் பதில் வரவில்லை. உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக மட்டுமே தகவல்கள் கிடைத்திருக்கின்றன.