இடைவெளி அதிகரிப்பு கட்டாயம்! – மத்திய அரசு திடீர் அறிவிப்பு!

0
112
Gap increase forced - Federal government announces sudden!

இடைவெளி அதிகரிப்பு கட்டாயம்! – மத்திய அரசு திடீர் அறிவிப்பு!

கொரோனா பாதிப்பு நம் நாட்டில் பெரும் பாதிப்புகளை, எண்ணிலடங்கா துயரங்களை ஏற்படுத்தி வருகிறது.மத்திய,மாநில அரசுகள் பல முயற்சிகள் மற்றும் பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

போர் கால அடிப்படையில் தற்போது நாம் நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற தடுப்பூசிகளை நோய் தொற்று உள்ளவர்களுக்கு பயன்படுத்தி வருகின்றது.

இத்தகைய சூழ்நிலையில் தடுப்பூசிகள் 2 டோஸ் போட்டுக்கொள்ள வலியுறுத்தப் படுகிறது.தற்போது அரசு சொன்ன அறிவுரைப்படி முதல் டோஸ் போட்டு 6 முதல் 8 வார இடைவெளியில் 2 வது டோஸ் போடப்படுகிறது.

ஆனால், தற்போது கொவிட் பணிக்குழு பரிந்துரையானது, இந்த தடுப்பூசி இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக உயர்த்திள்ளது.இந்த பரிந்துரையை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த பரிந்துரையின் பேரில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிவிக்கையை சமர்பித்துள்ளது.அதில் இந்த டோஸ்களுக்கான இடைவெளியை நீடிக்கலாம் என்று டாக்டர் என்.கே.அரோரா தலைமையிலான மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.

நிஜ வாழ்வின் ஆதாரங்களின் அடிப்படையிலும், இங்கிலாந்தில் இருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலும் இந்த தடுப்பூசிக்கான இடைவெளி நாட்களை அதிகரித்துள்ளது.

இதற்கான பரிந்துரை, 12 ந்தேதி  நிதி ஆயோக்கின் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால், தலைமையில் கோவிட் 19 தடுப்பூசிக்கான நிபந்தனைகளை தேசிய நிபுணர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த பரிந்துரையை மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துரை அமைச்சகமும் ஏற்றுக்கொண்டுள்ளது, என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.