மருத்துவ குணங்கள் நிறைந்த “பூண்டு”!! அட நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வாரி வழங்குகிறதா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

0
93
#image_title

மருத்துவ குணங்கள் நிறைந்த “பூண்டு”!! அட நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வாரி வழங்குகிறதா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

உணவில் பூண்டின் பயன்பாடு இன்றியமையாதது.இது உணவின் சுவையை கூட்டுவதற்கு மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கும் தான்.இந்த பூண்டில் வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி அலிசின்,அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட்,சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்டவையும் நிறைந்துள்ளது.

பூண்டு உண்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:-

*நீரிழவு நோய் இருப்பவர்கள் தினசரி உணவில் பூண்டு சேர்த்து வந்தால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்.

*தினசரி உணவில் பூண்டு சேர்த்து வருவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை சீராக இருக்கும்.

*தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டு தண்ணீர் அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

*சிறிதளவு பூண்டு பற்கள் எடுத்து நெருப்பில் சுட்டு சாப்பிடுவதன் மூலம் வாயுத்தொல்லை நீங்கும்.

*தினமும் பூண்டு சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு முழுவதுமாக கரைந்து விடும்.அதுமட்டும் இன்றி இதயத்தில் படிந்து கிடக்கும் கொழுப்புகளை கரைத்து வெளியேற்றவும் பூண்டு பெரிதும் உதவுகிறது.

*அதேபோல் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.உடலில் புற்று நோய் செல்கள் உருவத்தையும் தடுக்கிறது.

*நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று முகப்பரு.இந்த பாதிப்பு நீங்க பூண்டு சாறை முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி வருவதன் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும்.

*காது வலியால் பாதிக்கப்படும் நபர்கள் நல்லெண்ணையில் 10 பூண்டு பற்களை போட்டு சுண்ட காய்ச்சி கொள்ளவும்.பின்னர் அதை நன்கு ஆறவைத்து சிறிதளவு காதுகளில் விட்டு வருவதன் மூலம் காது வலி பாதிப்பு சரியாகும்.