Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சங்கடங்கள் தீர்க்கும் கருடாழ்வார்!

பொதுவாக எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் முதலில் விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் வழக்கம் அதேபோல பெருமாள் கோவில்களுக்கு நாம் செல்லும் சமயத்தில் முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு சாஸ்திரம் இருக்கிறது. இது அநேக நபர்களுக்கு தெரிந்ததில்லை. முதலில் கருவரை தரிசனம் செய்து அதன் பின்னர் பெருமாளை தரிசனம் செய்வது தான் சரியான முறை.

இனிமேல் பெருமாள் கோவிலுக்கு சென்றால் இந்த முறையை பின்பற்றி வழிபடுங்கள். ஒருவருக்கு இருக்கக்கூடிய தீராத உடல் உபாதைகள் தீர வேண்டுமென்றால் ஞாயிற்றுக் கிழமைகளில் பைரவரை வழிபடுவது சிறந்தது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் தீர்ந்து சந்தோஷம் பொங்க வேண்டும் என்றால் திங்கள்கிழமை அன்று கருடாழ்வாரை வழிபாடு செய்வது நல்லது.

உடல் உறுதியும், மன உறுதியும் தேவைப்படும் ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபாடு செய்யலாம்.

எதிரிகளால் தொல்லை இருப்பவர்களும் மிகவும் பயந்த சுபாவம் இருப்பவர்களும் கருடாழ்வாரை புதன்கிழமை என்று வழிபடுவது மிகச் சிறப்பு. நீண்ட ஆயுளைப் பெற வேண்டுமென்றால் வியாழக்கிழமை இந்த கருடாழ்வாரை வழிபாடு செய்யவேண்டும் வீட்டில் பணப் பிரச்சனை முடிவுக்கு வருவதற்கு வெள்ளிக்கிழமை அன்று இவரை வழிபட வேண்டும்.

சொர்க்க பிராப்தி பெற வேண்டுமென்றால் சனிக்கிழமை அன்று கருடாழ்வாரை வழிபாடு செய்யவேண்டும், இப்படி உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள குறிப்பிட்ட கிழமைகளிலும் இவரை வழிபாடு செய்யலாம். நாள்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய எப்படிப்பட்ட சங்கடங்களும் பனி போல மாறிவிடும் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version