Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

BREAKING: சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.268 உயர்வு.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது .அதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்ற நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் 15 ரூபாய் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.268 அதிகரித்து ரூ‌.2133-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வணிக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் கடைக்காரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூ‌.915.50-க்கும் விற்பனையாகிறது.

மேலும், வீடுகளில் தற்போது பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து 915.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்த பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீண்டும் அடுத்த வாரம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி ஏழை எளிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version