சமையல் எரிவாயு விலை திடீர் குறைவு..!!

0
195

சமையல் எரிவாயு விலை திடீர் குறைவு..!!

சென்னையில் மானியம் இல்லாத வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டர்களின் 64 ரூபாய் விலை குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் உருவாகும் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து ஆயில் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் வீட்டுப் பயன்பாடு மற்றும் பல்வேறு உணவக இடங்களில் பயன்படும் கியாஸ் சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத உருளைகளின் விலை ரூ.61.5 முதல் ரூபாய் 65 வரை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதத்தை தொடர்ந்து இரண்டு மாதங்களாக சிலிண்டர்களின் விலை குறைந்து வருகிறது. டெல்லியில் ரூ.805 க்கு விற்கப்பட்ட எரிவாயு உருளையின் விலை இன்று (ஏப்ரல் 1) முதல் ரூ.744 க்கு விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரூ.826 க்கு விற்கப்பட்ட உருளையின் விலை தற்போது ரூ.761 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கியாஸ் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது பலருக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது.