Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் – நடந்தது என்ன?

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் – நடந்தது என்ன?

ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினம் அருகே 20 கிராமங்கள் சேரும் இடத்தில் அமைந்திருக்கிறது எல்.ஜி.பாலிமர்ஸ் எனும் நிறுவனம். ஊரடங்கினால் மூடி வைக்கப்பட்டிருந்த இந்த நிறுவனம். ஊரடங்கு தளர்த்தப்பட்டால் இயக்குவதற்குத் தயார்ப் படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அதிகாலை 2 மணிக்கு மேல் 3 மணிக்குள் இந்த ஆலையிலிருந்து வாயுக்கசிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த கிராமத்திலிருந்தவர்கள் கொத்து கொத்தாக மயங்கி விழுந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலரௌ பரிசோதித்த மருத்துவர்கள், ஆலையிலிருந்து வெளியான வாயு ‘ஸ்டைரீன்’ ஆக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். ஸ்டைரீன் என்பது எரியக்கூடிய திரவப் பொருள்களில் ஒன்று. கார்களின் கதவுகள், பைப்புகள், பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்ட கடினமான பிளாஸ்டிக் பாகங்கள் தயாரிப்பில் இந்த ஸ்டைரீன் பயன்பாடு அதிகம். இது போன்ற பொருட்களைத் எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம தயாரித்து வருகிறது.

இந்த வாயு மனித உடலுக்குள் மூன்று வழிகளில் ஊடுருவும். தோல் மீது படுவதன் மூலமாக, மூச்சு மூலமாக மற்றும் உணவு மூலமாக என மூன்று வழிகளில் மனித உடலுக்குள் ஊடுருவக்கூடிய இந்த வாயு நொடியில் கண், முக்கு, தோல் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும், உடனடியாக மூச்சுக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மூச்சுத்திணறல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

இதுகுறித்து, கிங் ஜார்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறும்போது, “இந்த வாயு பட்டால், மூளை மற்றும் பின்பக்க தண்டுவடத்தைச் செயலிழக்கச் செய்யும். முறையான மற்றும் சரியான முறையில் ஆக்ஸிஜன் வழங்கலை உறுதி செய்தால் இறப்பைத் தவிர்க்க முடியும்” என்று தெரிவித்தனர்.

இந்த வாயுதான் விசாகப்பட்டினத்தில் தற்போது கசிந்திருக்கிறது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் ஆணையருக்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர சுதந்திரமாக செயல்பட உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த நேரத்தில் மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்ததால், மீட்புப் பணி இன்னும் கடினமாக இருந்ததாகக் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version