வாயுத் தொல்லை? இந்த ஜென்மத்தில் உங்களை அண்டாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க!!

0
81
#image_title

வாயுத் தொல்லை? இந்த ஜென்மத்தில் உங்களை அண்டாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க!!

நமமில் பலருக்கு வாயு தொல்லை தீராத பிரச்சனையாக இருக்கிறது. பொது வெளியில் தர்ம
சங்கடமான சூழலை ஏற்படுத்தும் இந்த வாயுத் தொல்லையால் பலரும் நிம்மதி இழந்து தவித்து வருகிறோம். நம் உடலில் இருந்து வெளியேறும் வாயு நாற்றம் இல்லாதவரை உடலுக்கு பிரச்சனை இல்லை. ஒருவேளை நாற்றம் எடுக்க தொடங்கினால் அதை உடனடியாக சரி செய்வது மிகவும் முக்கியம்.

வாயுத் தொல்லை ஏற்பட காரணம்:-

*துரித உணவு

*மலச்சிக்கல்

*செரிமானக் கோளாறு

*எண்ணெயில் பொரித்த உணவு

*வயிறு மந்த நிலையை அடைவது

*மூச்சு பிடிப்பு

*வயிற்றுப் போக்கு

*வயிறு உப்புசம்

*வயிற்றுப் பிடிப்பு

வாயு தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்:-

*ஓமம், சீரகம், வெந்தயம் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை சூடான நீரில் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து சிட்டிகை அளவு கல் உப்பு மற்றும் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து இரவு உணவு உண்ட அரை மணி நேரத்திற்கு பின் பருகவும். இப்படி செய்தால் உடலில் உள்ள கேஸ் முழுவதும் வெளியேறி விடும்.

*சிறிதளவு கொத்தமல்லி விதை, மிளகு, சீரகத்தை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
அடுத்து 1 துண்டு சுக்கை சேர்த்து பொடி செய்து கொள்ளவும். அடுத்து கொதிக்கும் நீரில் பொடி செய்து வைத்துள்ளவற்றை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பின்னர் சுவைக்காக சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவு உணவு உண்ட அரை மணி நேரத்திற்கு பின் பருகவும். இப்படி செய்தால் உடலில் உள்ள கேஸ் முழுவதும் வெளியேறி விடும்.

*உண்ணும் உணவை நன்றாக மென்று சாப்பிட்டு வருவது நல்லது. அதேபோல் கீரை மற்றும் பழங்கள் உண்ணும் பொழுது தயிர் மற்றும் பால் எடுத்துக் கொள்ளக்கூடாது.

*அதிக எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு, துரித உணவுகள், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் வறுத்த உணவு உள்ளிட்டவைகளை தவிர்ப்பது நல்லது. அதிக நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உண்பது நல்லது.

*புதினா டீ, சோம்பு, சீரகம்உள்ளிட்ட ஜீரணத்தை மேம்படுத்தும் பொருட்களை கொண்டு டீ செய்து பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

*முட்டைகோஸ், முட்டை, சுண்டல், அவரை கொட்டை, வேர்க்கடலை, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.