Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நெஞ்சு எரிச்சல் புளித்த ஏப்பம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிற்கிறதா? இதை குடிங்க இனி Acidity வராது..!

Gastric Problem in Tamil

Gastric Problem in Tamil: நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். என்னவென்றால் சில சமயங்களில் சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல், சாப்பிட்டது தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இடையில் உள்ளது போல, நெஞ்சு கரிப்பு, புளித்த ஏப்பம் போன்ற அறிகுறிகள் இருக்கும். பலரும் இதற்கு வெந்நீர் குடிப்பார்கள்.

ஒருசிலர் கடைகளில் சோடா போன்ற பானகங்கள் வாங்கி குடித்து பார்ப்பார்கள். ஆனால் இந்த பிரச்சனை மட்டும் சரியாகாமல் இருக்கும். ஒருசிலர் மெடிக்கல் சென்று இதற்கென்றே குறிப்பிட்ட மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாங்கி சாப்பிடுவார்கள். மீண்டும் சாப்பிடும் போது இது போன்ற பிரச்சனை ஏற்படும். அப்போதும் மருந்து சாப்பிடுவார்கள். இவ்வாறாக நடந்துக்கொண்டே தான் இருக்கும்.

இந்த பிரச்சனை ஏன் வருகிறது? இதற்கு என்ன தீர்வு என்பதை நாம் இந்த (Home Remedies for Acidity in Tamil) பதிவில் பார்க்கலாம்.

நெஞ்சரிச்சல், எதுக்களிப்பு

நாம் சாப்பிடும் உணவானது வாயில் இருந்து செரிமானத்திற்கு தயாரான நிலையில் உணவுக்குழாய வழியாக செல்கிறது. உணவுக்குழல் வழியாக இரைப்பைக்கு போகிறது.

இந்த உணவுக்குழல் பகுதிக்கும், இரைப்பை பகுதிக்கும் இடையில் ஒரு வால்வு ஒன்று இருக்கும் அதன் பெயர் தான் lower esophageal sphincter (LES). இந்த வால்வு நாம் சாப்பிடடம உணவை மீண்டும் உணவுக்குழலுக்கு செல்ல அனுமதிக்காது. இந்த வால்வில் பிரச்சனை வரும் போது தான் நாம் சாப்பிட்ட உணவு மீண்டும் உணவுக்குழல் பகுதிக்கு வருவது. அதனால் தான் நமக்கு சாப்பிட்ட உணவு ஏப்பமாகவும், எதுக்களிப்பும் வருகிறது.

ஒரு சிலருக்கு புளித்த ஏப்பம் வருவது, அதனால் வாயில் ஒருவிதமான புளிப்பு தன்மை மற்றும் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இது ஒருநாள் இவ்வாறாக இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் இதுவே ஒரு வாரத்திற்கு மேலாக இருந்தால் அது தான் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) ஆகும்.

யாருக்கெல்லாம் வரும்

முக்கியமாக இந்த பிரச்சனை வயதானவர்களுக்கு, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு, டீ, காபி அதிகமாக குடிப்பவர்களுக்கு, கர்பிணி பெண்களுக்கு, மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக வரும்.

தடுப்பது எப்படி

இது போன்று நெஞ்செரிச்சல் வந்தால் சோடா குடிக்க கூடாது.
இளநீர் குடிக்கலாம்.
சீரகம் கலந்த நீர் குடிக்கலாம்.
புதினா, துளிசி கலந்த நீர் குடிக்கலாம்.
மோர், இஞ்சி கலந்து குடிக்கலாம்.
முக்கியமாக காரம் கலந்த உணவை தவிர்க்க வேண்டும். காரம் தான் இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம்.

தேவையான பொருட்கள்

செய்முறை

முதலில் ஒரு கடாயில் அனைத்தையும் போட்டு நன்றாக வருக்க வேண்டும். கருகும் அளவிற்கு வறுக்க வேண்டும். இப்போது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் நன்றாக சுண்டி வரும் போது அதனை வடிக்கட்டி வெதுவெதுப்பாக குடித்தால் நெஞ்செரிச்சல் சரியாகிவிடும்.

மேலும் படிக்க: இந்த இலையை மட்டும் சாப்பிடுங்க போதும்… மூலம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்..!

Exit mobile version