தேனி மாவட்டத்தில் கோலாகலமாக நடந்த கவுமாரியம்மன் ஆனிதிருவிழா!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு கவுமாரியம்மன் ஆனிதிருவிழாவை முன்னிட்டு ஏரளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். கௌமாரியம்மன் கோவில் திருவிழா இன்று 10-ம் நாள் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீச்சட்டி எடுக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தீச்சட்டி எடுத்து காணிக்கை செலுத்தினர் தேனி மாவட்டம் பெரியகுளம் கௌமாரியம்மன் கோவில் ஆனி திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்த சங்க நிர்வாகிகளால் மண்டகப்படி நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான மலர்களால் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு யானை குதிரை அன்னப்பட்சி மற்றும் ஆயிரஆயிரம் வண்ண விளக்குகளை அலங்காரம் செய்யப்பட்ட ரதத்தில் அம்பாள் (உற்சவள்) நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாள். இதனை தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக மாவிளக்கு எடுத்தல் ஆயிரம் கண் பானை எடுத்தல் அழகு குத்துதல், அங்க பிரசன்னம் ,பண்ணுதல் மற்றும் தீச்சட்டி ( அக்னி சட்டி ) எடுக்கும் நிகழ்ச்சிசிறப்பாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரியகுளம் மற்றும் இதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து வந்து அம்மனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து தங்களுடைய நேர்த்திக் கடனாக அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தினார்கள்.இதனை தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே ஆண்கள் பெண்கள் என ஏராளமான பக்தர்கள் தலை முடியை காணிக்கை செலுத்தினர் முன்னதாக அம்மனுக்கு சிறப்பு நிகழ்ச்சியாக தேனி மாவட்ட விசுவ இந்து பரிசீத்து சார்பில் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனைகள் நடைபெற்றன இதில் நாடு நலம்பெற கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய நாட்டு மக்கள் அனைவரும் செலிப்போடு இருக்க பக்த்தர்கள் அம்மனை வழிபட்டனர்.